
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்
பதிகங்கள்

விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும்என் னாருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சன மாமே.
English Meaning:
It little profits if, intermittently, you pursue the Divine Light;Unceasing, I will seek the Greatness that has no end,
My Lord, my heart`s precious Life and treasured Delight;
In Him to merge is the holy bath.
Tamil Meaning:
மேலான ஒளி (பரஞ்சோதி) ஆகிய சிவபெரு மானை இடைவிட்டு நினைவதால் பயன் என்னை? தன்னை அடைய முயல்கின்ற எனக்கு என் ஆருயிர்போல்பவனாகிய சிவபெரு மானைத் தேன் போல் இனியவனாக அறிந்து அவனை இடைவிடாது நினைந்து நிற்றலே அவனுக்குச் சிறந்த திருமஞ்சனமாம். ஆதலால், அவனது முடிவில்லாத பெருமையை நான் பற்றிய பின்னர் விடுதல் என்பது இன்றித் தொடர்ந்து பற்றிக் கொண்டுள்ளேன்.Special Remark:
`அதனால் அவன் என்னைக் கைவிடாமை திண்ணம்` என்பது குறிப்பெச்சம். ``ஆருயிரால்`` என்பதில் ஆக்கம் உவமை குறித்து நின்றது. `மட்டுப்போல` என உவம உருபு விரித்து, `அறிந்து` என்பது வருவிக்க. அன்பே பெருமானுக்கு மஞ்சனமாதலை,`நேயமே நெய்யும் பாலா நிறையநீ ரமைய ஆட்டி` (தி.4)
என்பதனால் அறிக. அன்பு சிவபெருமானுக்குப் பிறவுமாதலை,
``அறவாணர்க்கன்பென்னும் அமுதமைத்தற் சனைசெய்வார்``
-தி.12 பெ.பு.வாயிலார், 8
என்பதனால் அறிக.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage