
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்
பதிகங்கள்

கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்றன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே.
English Meaning:
I saw the Feet of the Lord, deckt in odorous Konrai blooms,I saw the Feet of the Lord, dark-dressed in elephant-skin,
I saw the Feet of the Lord, on lotus-blossom abiding
I saw the Feet of the Lord, my heart-core`s love within.
Tamil Meaning:
கொன்றை மாலையாகிய திருவடையாள மாலை யால் பிரணவம் முதலிய மந்திரப்பொருள் தானேயாகியும், யானையை உரித்தமையால் ஆணவமலத்தைப் போக்குபவன் தானேயாகியும் நிற்றலால், அன்பால் நினைவாரது நெஞ்சத் தாமரையின்கண் விளங்கு பவனும் தானேயாகிய சிவபெருமானது திருவடிகளை நானே கண்டேன்; ஏனெனில், அவை எனது அன்பிடத்தே உள்ளனவாதலால்.Special Remark:
கொன்றை மாலையும், கரியுரியும் சில குறிப்படை யாளங்களாய் உள்ளன. அவற்றையும், மலர் உறைதலையும் வைத்த வைப்புமுறை அறிந்துகொள்க.கழலது என்ற ஒருமை, இனம்பற்றி வந்தது. ``அன்பினுள்`` என்றதன்பின், `ஆதலால்` என்பது சொல்லெச் சமாய் நின்றது.
இதனால், `மந்திரங்களின் உண்மையறிந்து ஓதி வழிபாடு செய்து அதனால் மலம் நீங்கப்பெற்று, அதன்பயனாக அன்பு நிகழப் பெற்றாரிடத்தே சிவன் உறைவன்` என்பது குறிப்பாற் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage