
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்
பதிகங்கள்

முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலார்நந்தி
யன்பில் அவனை அறியகி லாரே.
English Meaning:
Those who know nothing but the cycle of birth and deathThink that through worldly love they can attain the Lord,
But the Lord is beyond birth and death,
Only through true devotion can He be attained.
Tamil Meaning:
இனி எதிர்ப்படுதற்குரிய பிறப்பு இறப்புக்கள் இல்லாதவரே, `சிவபெருமானிடத்து அன்பு செய்து அவனை அடைவோம்` என்னும் துணிவினராவர். (அவர் இப்பொழுது எடுத்துள்ள பிறப்பும், அது நீங்குதலாகிய இறப்பும் அவருக்கு இன்பத்திற்கு ஏதுவாவனவேயாம்.) அத்தகைய பிறப்பு இறப்புக்களை இல்லாமையால் மேலும் பிறந்து இறந்து உழலும் வினையுடையோர் அவனிடத்து அன்பு செய்து அவனை அறியும் கருத்திலராவர்.Special Remark:
முன்பு, இடமுன் ``அறியாதார்`` என்றது, `இல்லாதவர்` என்றபடி. ``நந்தி அன்பு`` என்றது `நந்தி மேல் செலுத்தும் அன்பு` என்றதாம்.இதனால், அன்பினால் சிவனை அடைதல் பக்குவர்க்கே கூடுவதும், ஏனையோர்க்கு அது கூடாமையும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage