ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. உருவும் அருவும் உருவோ டருவும்
    மருவும் பரசிவன் மன்பல் லுயிர்க்கும்
    குருவும் எனநிற்கும் கொள்கைய னாகும்
    தருவென நல்கும் சதாசிவன் தானே.
  • 10. சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணி
    சத்தி சிவனுமாம் சிவன்சத் தியுமாகும்
    சத்தி சிவனன்றித் தாபரம் வேறில்லை
    சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே.
  • 2. நாலான கீழ உருவம் நடுநிற்க
    மேலான நான்கும் அருவம் மிகநாப்பண்
    நாலான ஒன்றும் அருஉரு நண்ணலால்
    பாலாம் இவையாம் பரசிவன் தனே.
  • 3. தேவர் பிரானைத் திசைமுகர் நாதனை
    நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை
    யாவர் பிரான்என் றிறைஞ்சுவார் அவ்வ
    ஆவர் பிரான்அடி அண்ணலும் ஆமே.
  • 4. வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற
    ஆண்டொடு திங்களும் நாளும் அளக்கின்ற
    காண்டகை யானொடும் கண்ணி யுணரினும்
    ஊண்டகை மாறினும் ஒன்றது ஆமே.
  • 5. ஆதி பரதெய்வம் அண்டத்து நற்றெய்வம்
    சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
    நீதியுள் மாத்தெய்வம் நின்மலன் எம்இறை
    பாதியுள் மன்னும் பராசத்தி யாமே.
  • 6. சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே
    சுத்த சிவபேதம் தோயாத தூவொளி
    அத்தன் திருவடிக் கப்பாலுக் கப்பாலாம்
    ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே.
  • 7. கொழுந்தினைக் காணின் குலயம் தோன்றும்
    எழுந்திடம் காணின் இருக்கலும் ஆகும்
    பரம்திடம் காணின்பிந் பார்ப்பதி மேலே
    திரண்டெழக் கண்டவன் சிந்தை உளானே.
  • 8. எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்
    முந்த உரைத்து முறைசொல்லின் ஞானம்ஆம்
    சந்தித் திருந்த இடம்பெருங் கண்ணியை
    உந்திக்கு மேல்வைத் துகந்திருந் தானே.
  • 9. சத்தி சிவன்விளை யாட்டாம் உயிர்ஆகில்
    ஒத்த இருமாயா கூட்டத் திடைஊட்டிச்
    சுத்தம தாகும் துரியம் பிரிவித்துச்
    சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே.