
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்
பதிகங்கள்

கொழுந்தினைக் காணின் குலயம் தோன்றும்
எழுந்திடம் காணின் இருக்கலும் ஆகும்
பரம்திடம் காணின்பிந் பார்ப்பதி மேலே
திரண்டெழக் கண்டவன் சிந்தை உளானே.
English Meaning:
See Siva and Sakti and see All in HimSee that Tender Flame
You will have seen all universe;
Rise and see His World
There you shall forever remain;
See the Expanses Vast
You shall have seen the Lord with Sakti entwined;
The Lord that in your thought resides.
Tamil Meaning:
`எல்லாப் பொருள்களின் முடிவுக்கும் முடிவாய் உள்ள` ``போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே``3 பரமசிவனது உண்மையை உணரின் `அவனே உலகம் அனைத்திற்கும் முதல்` என உலகத்தின் முடிநிலைக் காரணம் விளங்கும். பின் அந்தப் பரமசிவன் முதற்பொருளாய் எழுதற்கு காரணமான அவனது குணமாம் பராசத்தியை உணரின் அஃதே எல்லையில் இன்ப வெள்ள மாய் விலைதலால், அப்பால் அலைவுயாதும் இன்றி, அந்த இன்ப வெள்ளத்திலே அமைதியுடன் இருத்தல்கூடும். எப்பொருள் எத் தன்மைத்தாயினும் அப்பொருளில் மெய்ப்பொருளாகிய பரம சிவனைl அலைவின்றிக் காணும் மெய்யுணர்வைப் பெற்றால் அவ் வுணர்விலே முன்னே அருள்நிலை தோன்ற, அதன்பின் அதற்கு மேலாகப் பொருள் நிலையாகச் சிவன் விளங்குவான். அங்ஙனம் விளங்கக் கண்டவனது உள்ளத்தில்தான் அந்தச் சிவன் என்றும் இருக்கின்றான்.Special Remark:
`ஆகவே, அங்ஙனம் காணுதலாகிய உணர்வே ஞான லிங்கமாம்` என்பது கருத்து. முடிவில் உள்ளதை, `கொழுந்து` என்றல் வழக்கு. குவலயம் - குவலயத்தின் உண்மை, `எழுந்த` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. ``இருக்கலும்`` என்னும் உம்மை உயர்வு சிறப்பு. பரம் - மேல். மேல் உள்ளவனை `மேல் என்றது ஆகுபெயர்; திடமாக என ஆக்கம் விரித்துரைக்க. ``பார்ப்பதி`` - என்றது `சிவ சத்தி` என்னும் பொருளதாய்த் திருவருளைக் குறித்தது. ``திரண்டு எழ`` என்றதனாலே, திரண்டு எழுதலும் அனுவாத முகத்தால் பெறப்பட்டது. உளனாதற்கு `அவன்` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.இதனால், சொரூப ஞானமாகிய ஞானலிங்கம் உளதாமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage