
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்
பதிகங்கள்

சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே
சுத்த சிவபேதம் தோயாத தூவொளி
அத்தன் திருவடிக் கப்பாலுக் கப்பாலாம்
ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே.
English Meaning:
Truth of Supreme SivaBeyond Sakti, inside Para Sakti
Is the Pure Siva State, as Light undimmed
Still beyond and beyond are the Lord`s Feet;
This the Truth of the Lord Supreme.
Tamil Meaning:
ஆதிசத்திக்குமேல் உள்ளதாகிய பராசத்தியில் விளங்குவதே வாக்கும், மனமும் எட்டாது நிற்கும் தூய ஒளியாகிய சுத்தசிவ நிலை. அதனால், சிவன் பிறிதொன்றோடும் படாது தானேயாய் நிற்கின்ற அவனது உண்மைநிலை, ஞானசத்தி கிரியா சத்திகட்கு முதலாய் உள்ள ஆதி சத்திக்கு அப்பால் உள்ள பராசத்தியின்கண் நிற்பதே யாகும். எனினும் அவனது நிலைகள் ஆதிசத்தி. ஞானசத்தி, கிரியா சத்திகள் ஆகிய அவைகளோடும் இயைந்து நிற்பனவேயாம்.Special Remark:
`அஃது அவனது பொதுநிலை` என்றபடி. `அந்தப் பொதுநிலையை அவன் அடைதற்குக் காரணம் உயிர்களிடத்து வைத்த கைம்மாறு கருதாத கருணையே` என்பது கருத்து. ``ஈசன்`` எனப் பின் வருதலால், ``அத்தன்`` என்றது, `தன்` என்னும் அளவாய் நின்றது.``தோயாத தூவொளி`` என்பதை, ``சுத்த சிவபதம்`` என்பதற்கு முன்னேயும், ``ஒத்தவும் ஆம்`` என்பதை இறுதியிலும் கூட்டியுரைக்க. `தடத்த நிலைகள் பல` என்பது உணர்த்துதற்கு அதனைப் பன்மையாக ஓதினார்.
இதனால், முதற்பொருளை இவ்வியல்பினதாக உணரும் உணர்வே ஞானலிங்கம் ஆதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage