
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்
- எட்டாம் தந்திரம் - 2. உடல் விடல்
- எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்
- எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை
- எட்டாம் தந்திரம் - 5. அத்துவாக்கள்
- எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
- எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
- எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை
- எட்டாம் தந்திரம் - 9. முக்குண நிர்க்குணங்கள்
- எட்டாம் தந்திரம் - 10. அண்டாதி பேதம்
- எட்டாம் தந்திரம் - 11. பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல்
- எட்டாம் தந்திரம் - 12. கலவு செலவுகள்
- எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
- எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்
- எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்
- எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை
- எட்டாம் தந்திரம் - 17. அடிதலை அறியும் திறங்கூறல்
- எட்டாம் தந்திரம் - 18. முக்குற்றம்
- எட்டாம் தந்திரம் - 19. முப்பதம்
- எட்டாம் தந்திரம் - 20. முப்பரம்
- எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்
- எட்டாம் தந்திரம் - 22. முத்துரியம்
- எட்டாம் தந்திரம் - 23. மும்முத்தி
- எட்டாம் தந்திரம் - 24. முச்சொரூபம்
- எட்டாம் தந்திரம் - 25. முக்கரணம்
- எட்டாம் தந்திரம் - 26. முச்சூனிய தொந்தத்தசி
- எட்டாம் தந்திரம் - 27. முப்பாழ்
- எட்டாம் தந்திரம் - 28. காரிய காரண உபாதி
- எட்டாம் தந்திரம் - 29. உபசாந்தம்
- எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை
- எட்டாம் தந்திரம் - 31. அட்ட தள கமல முக்குண அவத்தை
- எட்டாம் தந்திரம் - 32. நவாவத்தை அபிமானி
- எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம
- எட்டாம் தந்திரம் - 34. மோட்ச நிந்தை
- எட்டாம் தந்திரம் - 35. இலக்கணாத் திரயம்
- எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்
- எட்டாம் தந்திரம் - 37. விசுவக் கிராசம்
- எட்டாம் தந்திரம் - 38. வாய்மை
- எட்டாம் தந்திரம் - 39. ஞானிகள் செயல்
- எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல்
- எட்டாம் தந்திரம் - 41. பத்தியுடைமை
- எட்டாம் தந்திரம் - 42. முத்தியுடைமை
- எட்டாம் தந்திரம் - 43. சோதனை
Paadal
-
1. உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்
துதிக்கும் நிருதி வருணன் நல் வாயு
மதிக்கும் குபேரன் வடதிசை ஈசன்
நிதித்தெண் டிசையும் நிறைந்திநின் றாரே.
-
10. ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்
வொன்றும் இருந்து விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்தும் திருவுடை யோரே.
-
2. ஒருங்கிய பூவும்ஓர் எட்டித ழாகும்
மருங்கியல் மாயா புரியத னுள்ளே
சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே
ஒருங்கிய சோதியை ஓர்ந்தெழும் உய்ந்தே.
-
3. மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்
விட்டலர் கின்றனன் சோதி விரியிதழ்
எட்டல ருள்ளேர் பிரண்டல ருள்ளுறில்
பட்டலர் கின்றதோர் பண்டம் கனாவே
-
4. ஆறே அருவி அகம் குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலைக் கொம்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.
-
5. திகையெட்டும் தேர்எட்டும் தேவதை யெட்டும்
அகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை
வகையெட்டும் நான்கும்மற் றாங்கே நிறைந்து
முகையெட்டி னுள்நின் றுதிக்கின்ற வாறே.
-
6. ஏழும் சகலம் இயம்பும் கடந்தெட்டில்
வாழும் பரம்ஒன்(று) அதுகடந் தொன்பதில்
ஊழி பராபரம் ஊங்கியை பத்தினில்
தாழ்வு அது ஆன தனித்தன்மை தானே.
-
7. பல்லூழி பண்பிற் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற ஊழிகள்
செல்லூழி அண்டத்துச் சென்றவண் ஊழியுள்
அவ்வூழி உச்சியுள் ஒன்றின் பகவனே.
-
8. புரியும் உலகினைப் பூண்டஎட் டானை
திரியும் களிற்றொடு தேவர் குழாமும்
எரியும் மழையும் இயங்கும் வளியும்
பரியும்ஆ காசத்தில் பற்றது தானே.
-
9. ஊறும் அருவி உயர்வரை உச்சிமேல்
ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு
சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்
பூவன்றிச் சூடான் புரிசடை யோனே.