
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 31. அட்ட தள கமல முக்குண அவத்தை
பதிகங்கள்

திகையெட்டும் தேர்எட்டும் தேவதை யெட்டும்
அகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை
வகையெட்டும் நான்கும்மற் றாங்கே நிறைந்து
முகையெட்டி னுள்நின் றுதிக்கின்ற வாறே.
English Meaning:
He Blooms Within Petals EightThe Primal One stood,
As directions eight,
Mountains eight,
Gods eight
And Forms eight;
Reach Him,
Who fills within
From eight to four petalled centre;
He Who blooms within petals eight.
Tamil Meaning:
தியானப் பொருள் பிராசாத கலைகள் பன்னிரண்டிலும் நிறைந்து, எட்டிதழ்த் தாமரையாகிய இதய கமலத்திலும் பொருந்தி வெளிப்படச் செய்கின்ற முறை, திசையெட்டும், அவற்றைக் காக்கின்ற தேவர் எண்மரும், அவர்தம் ஊர்தி முதலியனவும், ஐம்பெரும்பூதம், இருசுடர், உயிர் ஆகிய எட்டுப் பொருள்களும் ஆகிய அனைத்துமாய் உள்ள முதல்வனாகிய சிவபிரானை வெளிப்படச் செய்யும் முறையேயாம்.Special Remark:
`தியானப் பொருள் சிவனே` என்றபடி ``தேர் எட்டும்`` என்பதை, ``தேவதை எட்டும்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``தேர்`` என்றது, படைக்கலம் முதலிய பிறவற்றையும் தழுவிய உபலக்கணம். `திசைக் காவலர் அவ்வாறெல்லாம் வழிபடப்படுவர்` என்க. அகை - பிரிவு. மற்று, அசை. மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, `உதிப்பிக்கின்ற ஆறு, ஆதிப்பிரானை` என முடிக்க. `ஆதிப் பிரானை உதிப்பிக்கின்ற ஆறாம்` என்றபடி. ஆறு - முறைமை. `உதிப்பிக்கின்ற` என்பதில் பிறவினை விகுதி தொகுக்கப்பட்டது.இதனால், `யோகத்தின் எட்டுறுப்புக்களில் `தியானம்` ஏதேனும் ஒன்றைத்தியானிப்பது அன்று; சிவனைத் தியானிப்பதே` என்பது கூறப்பட்டது. `ஏதேனும் ஒன்றைத் தியானிக்கலாம்` என்பது யோக மதம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage