
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 31. அட்ட தள கமல முக்குண அவத்தை
பதிகங்கள்

உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்
துதிக்கும் நிருதி வருணன் நல் வாயு
மதிக்கும் குபேரன் வடதிசை ஈசன்
நிதித்தெண் டிசையும் நிறைந்திநின் றாரே.
English Meaning:
Gods in the Eight Cardinal Points of EarthIndra, Agni, Yama and Nrudi
Varuna, Vayu, Kubera, and Isanana
They (gods) in order according
Filled the cardinal directions eight.
Tamil Meaning:
``அண்ட பிண்டம் அவை சமம்``* *கோயிற் புராணம் - பதஞ்சலி சருக்கம் - 70. என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது ஆதலின், இதய கமலம் எட்டிதழ்களை உடையதாகக் கொள்ளப்படுதல் போலவே நில வுலகமும் எட்டிதழ்களையுடைய தாமரை மலர்களும், அவ்விதழ்களில் திசைக் காவலர்கள் இருப்பதாகவும் பாவித்து அவர்களை வழிபடல் வேண்டும் - என்பது வைதிகக் கொள்கை. அவரளவிற்கு அது வேண்டுவதே என்பதை முதற்கண் கூறுகின்றார். இதன் பொருள் வெளிப்படை.Special Remark:
உதிக்கின்ற சூரியனுடன் தோன்றுகின்ற இருளில் தோன்றாமை எல்லார்க்கும் உரியது ஆதலின். இதனை ஏனையோர்க்கும் கொள்க. இந்திரன் முதலிய எண்மரையும் கிழக்கு முதலாகத் தொடங்கி எட்டுத்திசையையும் வலமாக எண்ணிப் பொருத்திக் கொள்க. ஈசன் - ஈசானன். நிதித்தல் - நிதிமிகுதல்.இதனால் `திசை காக்கும் கடவுளர் எண்மராவார் இவர்` என்பது கூறப்பட்டது. கிழக்கிலும், வடக்கிலும் இந்திரனையும், குபேரனையும் நீக்கி, முறையே `ஞாயிறு, திங்கள்` என்பவரைக் கூறுதலும் உண்டு. அவ்விடத்தில் திங்களை, `சோமன்` என்ப,
``ஞாயிறாய், நமனு மாகி,
வருணனாய்ச், சோம னாகித்
தீ, யறாநிருதி, வாயு,
திப்பிய சாந்த னாகி`` - திருமுறை - 4,32.6.
என்னும் திருப்பாடலைக் காண்க. இனி, `சோமன்` என்பதும் குபேரன் பெயரே என்பாரும் உளர்,
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage