
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 31. அட்ட தள கமல முக்குண அவத்தை
பதிகங்கள்

ஆறே அருவி அகம் குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலைக் கொம்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.
English Meaning:
Siva-Sakti in Eight-Petalled LotusThe six streams (of Adharas)
Into one Pond flow;
Thus in Way subtle
Into Siva-State penetrate;
There indeed is the Precious Truth,
Himself with Sakti stands,
—She of bouncing breasts and tender vine form.
Tamil Meaning:
உடம்பினுள், முன் அதிகாரத்தில் கூறியவாறு உள்ள சிறுமலையினின்றும் தோன்றுவது ஆறு அன்று; அருவியே அந்த அருவியின் நீரை ஏற்கின்ற குளம் (ஏரி) ஒன்று உண்டு. அதில் விளையும் விளைவுவகைகளோ பல. ஆயினும் அவ்வினைவினது இயல்பு அறிதற்கரிதாய மிக நுட்பமாய் உள்ளது. அதனை வெளிப் படக்கூறினால், மாதொரு கூறனாகிய பரம்பொருளேயாம்.Special Remark:
`அருவியே ஆறு` என ஏகாரத்தை மாற்றி யுரைக்க. ``அகம்`` என்பதை முதலிற் கூட்டுக. ``அருவி`` என்றதனால், அது தோன்றும் இடமாகிய மலையுண்மை தானே பெறப்பட்டது. `மலையில் ஆறு உற்பத்தியாதல் இயல்பு; ஆயினும் இங்கு அஃதில்லை` என்றபடி. `அஃது ஆஞ்ஞை` என்பது மேலே சொல்லப்பட்டது. அருவி - ஆஞ்ஞை யினின்றும் பெருகும் அமுத தாரை. குளம் - இருதயம். விளைவு பல வகையினதாதல் இறைவனது எண் குணங்கள் பற்றியாம். முதல் இரண்டடிகளிற் பொதுப்படக் கூறியவற்றை ஏனையோர் அறிவா ராயினும், அதனைச் சிறப்புவகையான் அறியாமை பற்றி, `அதனை அவ்வாறு அறிதல் வேண்டும்` என்பதைப் பின்னிரண்டடிகளால் கூறினார். `அங்ஙனம் உணராத பொழுது அவர் முயற்சி பெரும்பயன் தாராது` என்பதாம். வேறேயிருத்தல், தலைமையிடத் திருத்தல்.இதனால், மேலையாதார யோகங்களையும் சிவ யோகமாகச் செய்யுமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage