
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- இரண்டாம் தந்திரம் - 1. அகத்தியம்
- இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு
- இரண்டாம் தந்திரம் - 3. இலிங்க புராணம்
- இரண்டாம் தந்திரம் - 4. தக்கன் வேள்வி
- இரண்டாம் தந்திரம் - 5. பிரளயம்
- இரண்டாம் தந்திரம் - 6. சக்கரப் பேறு
- இரண்டாம் தந்திரம் - 7. எலும்பும் கபாலமும்
- இரண்டாம் தந்திரம் - 8. அடிமுடி தேடல்
- இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி
- இரண்டாம் தந்திரம் - 10. திதி
- இரண்டாம் தந்திரம் - 11. சங்காரம்
- இரண்டாம் தந்திரம் - 12. திரோபவம்
- இரண்டாம் தந்திரம் - 13. அநுக்கிரகம்
- இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
- இரண்டாம் தந்திரம் - 15. மூவகைச் சீவ வர்க்கம்
- இரண்டாம் தந்திரம் - 16. பாத்திரம்
- இரண்டாம் தந்திரம் - 17. அபாத்திரம்
- இரண்டாம் தந்திரம் - 18. தீர்த்த உண்மை
- இரண்டாம் தந்திரம் - 19. திருக்கோயிற் குற்றம்
- இரண்டாம் தந்திரம் - 20. அதோமுக தரிசனம்
- இரண்டாம் தந்திரம் - 21. சிவநிந்தை கூடாமை
- இரண்டாம் தந்திரம் - 22. குரு நிந்தை கூடாமை
- இரண்டாம் தந்திரம் - 23. மாகேசுர நிந்தை கூடாமை
- இரண்டாம் தந்திரம் - 24. பொறையுடைமை
- இரண்டாம் தந்திரம் - 25. பெரியாரைத் துணைக்கோடல்
Paadal
-
1. அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டதவ்
வங்கிஅவ் வீசற்குக் கைஅம்பு தானே.
-
10. தீயவைத் தார்மின்கள் சேரும் வினைதனை
மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தாய்உணர் வாரவைத் தானே.
-
2. இலயங்கள் மூன்றினுள் ஒன்றுகற் பாந்தம்
நிலையன் றழிந்தமை நின்றுணர்ந்தேனால்
உலைதந்த மெல்லரி போலும் உலகம்
மலைதந்த மாநிலந் தான்வெந் ததுவே.
-
3. பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்
குதஞ்செய்யும் அங்கி கொளுவி ஆகாச
விதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே.
-
4. கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிரையாகி
ஒன்றின் பதஞ்செய்ய ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேல்அங்கி கோலிக்கொண் டானே.
-
5. நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாம்
சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம்
உய்த்தசங் காரம் பரன்அருள் உண்மையே.
-
6. நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாம்
சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவன்அருள் உண்மையே.
-
7. நித்தசங் காரங் கருவிடர் நீக்கினால்
ஒத்தசங் காரம் உடலுயிர் நீவுதல்
சுத்தசங் காரம் அதீதத்துள் தோய்வுறல்
உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே.
-
8. நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்
வைத்தசங் காரமும் மன்னும் அனாதியில்
சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்
உய்த்தசங் காரமுன் நாலாம் உதிக்கிலே.
-
9. பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.