
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 11. சங்காரம்
பதிகங்கள்

இலயங்கள் மூன்றினுள் ஒன்றுகற் பாந்தம்
நிலையன் றழிந்தமை நின்றுணர்ந்தேனால்
உலைதந்த மெல்லரி போலும் உலகம்
மலைதந்த மாநிலந் தான்வெந் ததுவே.
English Meaning:
Three are His layas—the moments of ReposeOf them one, kalpanta—the end of aeons,
I witnessed;
All things fell uprooted in destruction
This orb then was unto a boiling rice pot
Its mountains and valleys alike burnt to ashes.
Tamil Meaning:
மூவகைச் சங்காரங்களுள் `கற்ப சங்காரம்` என்பதும் ஒன்று. அதில் எல்லாப் பொருளும் சங்கரிக்கப் பட்டொழிந் தமையை ஏனைய இரண்டு சங்காரங்களில் நிற்குமாற்றால் நான் கருதியுணர்ந்துகொண்டேன். கால வயப்பட்டுநிற்கும் உலகம் உலை யில் இடப்பட்ட அரிசிபோல்வதாம். ஆகவே, என்றும் அழியாதன போல மலைவைத் தந்து நிற்கும் இப்பெரு நிலம் முடிவில் அழிந் தொழிந்தது.Special Remark:
`மூவகைச் சங்காரம் இவை` என்பது, வருகின்ற திரு மந்திரங்களுள் கூறப்படும். `நனவு நிலையில் நிற்பவன் அந்நிலையில் ஒருபெற்றியே நிற்கமாட்டாது காலவயத்தால் கனவு முதலியவற்றிற் சென்று அறிவு கெடுதலையும், பிறந்த உயிர் அந்நிலையிலே நிற்க மாட்டாது காலவயத்தால் அவ்வுடலைவிட்டு இறந்தொழி தலையும் உற்றுநோக்கினால், உலகம் முழுதும் இவ்வாறே காலவயப் பட்டு அழிந்து பின்பு தோன்றியதாகும் என்பது விளங்கும்` என்பார், ``கற்பாந்தம் நிலையன்றழிந்தமை நின்றுணர்ந்தேன்`` என்றார். நிலை - நிலைத்தொழிலை உடைய பொருள்கள்; ஆகுபெயர். இது, `நீவிரும் அவ்வாறு உணர்மின்` என்றவாறு. இவ்வாறே திருவள்ளுவரும்,உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. -குறள், 339
என்று உடலின் அழிவுதோற்றங்களை அறிவின் அழிவின் தோற்றங் களில் வைத்துத் தெளிவித்தார். முன்பு இருவகை அழிப்பின் வைத்து உலக அழிவை வலியுறுத்தினாராகலின், ``உலை தந்த மெல்லரி போலும் உலகம்`` என அதன் நிலையாமையைப் பின்னர் வலியுறுத்தி, ``மாநிலம் தான் வெந்ததுவே`` என நிலவுலக அழிவை முடிவில் நிறுவினார். அரி - அரிசி. மலை - மலைவு; மயக்கம்; முதனிலைத் தொழிற்பெயர். பிரம கற்பம், விட்டுணு கற்பம் முதலாகக் கற்பங்கள் தாம் பல. அவற்றுள்ளும் அவரவர் உறங்கும் காலம் அவரவர்க்கு நித்திய கற்பமாகவும், இறக்குங் காலம் மகாகற்பமாகவும் சொல்லப் படும். கற்பம் - ஊழி. காணப்பட்ட உலகத்தை ``வெந்தது`` என்றது, முன்னை ஊழியிறுதி நோக்கியாம். எனவே, `பின் தோன்றியது` என்பதும் பெறப்படும். ஆகவே, `வெந்தது` என்பது இறந்தகால வினைப்பெயர்.
இதனால், உலக சங்காரம் இல்லை என மயங்குவார்க்கு, `அது உண்டு என்பத
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage