
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 11. சங்காரம்
பதிகங்கள்

நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாம்
சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம்
உய்த்தசங் காரம் பரன்அருள் உண்மையே.
English Meaning:
Daily mergence is in deep sleep,The next mergence is beyond sleep,
The pure mergence is when the jiva remains complete actionless,
The ultimate mergence is in Sivasakti.
Tamil Meaning:
மூவகைச் சங்காரத்துள் நித்திய சங்காரமாவது அன்றாடம் கீழாலவத்தையில் அறிவிழந்திருத்தல். பிறவி எடுத்த எல்லா உயிர்கட்கும் பொதுவாக வைக்கப்பட்ட ஆயுட் சங்காரமாவது விழித்தல் இல்லாத உறக்கமாகிய இறப்பாகும். சருவ சங்காரமாவது ஆன்மா செயலற்று ஆணவத்திலே அழுந்திச் சடம்போலக் கிடத்தல். அதனால், உயிரை நீங்கா இன்பத்தில் செலுத்துதலாகிய திருவருட் சங்காரமாகிய அருளலே இறைவனது உண்மை நிலையைப் பெறுதலாகும்.Special Remark:
மீளச் சாக்கிரம் எய்தாத நிலையை, ``சாக்கிராதீதம்`` என்றார். எனவே, இது விழியா உறக்கமாயிற்று. ``சுத்தம்`` என்றது, ஒன்றும் இன்மையைக் குறித்தது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage