
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 11. சங்காரம்
பதிகங்கள்

பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.
English Meaning:
Out of Void (Siva), a plant (soul) it sprang,To the Void it returns;
Yet shall it not be Void again;
In that Void, exhausted, it shall die;
That is the fate of Hari and Brahma too,
Who the holocaust of Samhara susvive not.
Tamil Meaning:
மாயை வித்தாக, அதனினின்றும் முளைக்கின்ற பயிராய் உலகம் தோன்றும். பின்பு அப்பயிராகிய உலகம் வித்தாகிய அம்மாயையினிடத்தே ஒடுங்குவதாம். அவ்வாறு ஒடுங்கினும், என்றும் உளதாகிய மாயை ஒன்றிலும் ஒடுங்குதல் இல்லை. உலகம் மாயையின் ஒடுங்குதலாகிய சருவ சங்காரமின்றிப் பிரகிருதிகாறும் அழிவதாகிய அந்தச் சங்காரகாலத்திற்கு உட்பட்டே மால் அயன் செய்திகளாகிய காத்தல் படைத்தல்கள் நிகழும். ஆகவே, தத்தம் கால எல்லையில் மடிந்து போகின்ற பயிர்போல, உலகம் முழுவதும் ஒடுங்குவது மாயையிலல்லது பிரகிருதியில் அன்று.Special Remark:
``பாழ்`` என்பது முதற் காரணம் தனது காரியத்தைத் தோற்றுவியாத நிலை. இது பற்றியே பிரகிருதியையும் `பாழ்` என்ப (பரிபாடல் ... ... ``பாழெனக் காலெனப் பாகெனத் தொண்டென``) . இவ்வாறன்றி முதல்வனைப் `பாழ்` என்றல் பொருந்தாமை அறிக. உலகம் மாயையின் ஒடுங்காது பிரகிருதியின் ஒடுங்கிய பொழுது பரசரீரம் உளதாயினும் போகம் நிகழாதாகலின், அதனை, `வாழாச் சங்காரம்` என்றார். இச்சங்காரம் குணிருத்திரனால் செய்யப் படுவதாதல் அறிக. (சிவஞான மாபாடியம் - முதற் சூத்திரக் கருத்துரை விளக்கம்) குண சரீரம், கஞ்சுக சரீரம், காரண சரீரம் இம் மூன்றன் தொகுதியே பர சரீரம் அல்லது அதி சூக்கும சரீரம். ``பயிராய்`` என்பதில் ஆக்கம் உவமை குறித்து நின்றது.இதனால், `அசுத்தமும், சுத்தமும் ஆய மாயைகளில் அவ்வவ் வுலகம் ஒடுங்குவதே சருவ சங்காரம்` என்பதும், அவற்றிற்குக் கீழ்நடைபெறுவன எல்லாம் அவாந்தர (இடைநிகழ்) சங்காரம் என்பதும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage