ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
    பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
    பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
    பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே.
  • 10. நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத்
    தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று
    கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல
    வீடு மளவும் விடுகின் றிலேனே.
  • 2. தமிழ்மண் டலம்ஐந்தும் தாவிய ஞானம்
    உமிழ்வது போல உலகர் திரிவார்
    அவிழும் மனமும் ஆதி யருளும்
    தமிழ்மண் டலம்ஐந்தும் தத்துவ மாமே.
  • 3. புண்ணியம் பாவம் இரண்டுள பூமியில்
    நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்
    எண்ணி இரண்டையும் வேரறுத் தப்புறத்
    தண்ணல் இருந்திடம் ஆய்துகொள் ளீரே.
  • 4. முன்னின் றருளும் முடிகின்ற காலத்து
    நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்
    பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்
    முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே.
  • 5. சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர்
    சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர்
    சிவனரு ளால்வினை சேரகி லாமை
    சிவனருள் கூடிற் சிவலோக மாமே.
  • 6. புண்ணியன் எந்தை புனிதன் இணையடி
    நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது
    மண்ணவ ராவதும் வானவ ராவதும்
    அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே.
  • 7. காயத்தேர் ஏறி மனப்பாகன் கைகூட்ட
    மாயத்தேர் ஏறி மயங்கும் அவை உணர்
    நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
    ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆகுமே.
  • 8. அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும்
    அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்
    அவ்வுல கத்தே அரனடி கூடுவர்
    அவ்வுல கத்தே அருள்பெறு வாரே.
  • 9. கதிர்கண்ட காந்தம் கனலின் வடிவாம்
    மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாம்
    சதிர்கொண்ட சாக்கி சரியன் வடிவாம்
    எதிர்கொண்ட ஈசன் எழில்வடி வாமே.