
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 7. அருளுடைமையின் ஞானம் வருதல்
பதிகங்கள்

சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர்
சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர்
சிவனரு ளால்வினை சேரகி லாமை
சிவனருள் கூடிற் சிவலோக மாமே.
English Meaning:
Things That Come of Siva`s GraceBy Siva`s Grace some become Devas
By Siva`s Grace some equal Gods
By Siva`s Grace Karmas near not;
When you have Siva`s Grace,
You shall enter His Kingdom, indeed.
Tamil Meaning:
சிவனது அருளாலே சிலர், தேவர் பதவியை வேண்டின் அவற்றையும் பெறுவர். சிலர் அதனால் மக்களுடம்பில் நின்றே தெய்வங்களோடு ஒத்த ஆற்றல் பெற்று விளங்குவர். எனினும், சிவனது அருளால் சிறப்பாக வினை நீக்கம் உண்டாதலால், சிவனது அருள் ஒருவர்க்கு உண்மையாகக் கூடிற்றுஎன்றால், அதன் பயனாக அவர்க்குச் சிவலோகமே கிடைக்கும்.Special Remark:
உம்மை சிறப்பும்மை. `சேரகிலாமையால்` என உருபு விரிக்க. `சிவனருள் கூரின்` என்பதும்பாடமாகலாம். ``கூறின்`` என்பது பாடமன்று.இதனால், சிவனருளின் பெருமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage