
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 7. அருளுடைமையின் ஞானம் வருதல்
பதிகங்கள்

அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும்
அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்
அவ்வுல கத்தே அரனடி கூடுவர்
அவ்வுல கத்தே அருள்பெறு வாரே.
English Meaning:
Tapasvins Will Receive Grace Even HereafterIf born in body in the Other World
Tapasvins will pursue tapas there;
And will there reach Lord`s Feet
And receive His Grace for sure.
Tamil Meaning:
`சரியை, கிரியை, யோகம்` என்னும் இவற்றின் பயனாகச் சிவலோகவாசிகளாய் அங்குத்தோன்றினும் அங்ஙனம் தோன்றினோர் ஞானத்தைப் பெறுதற்கு அவ்வுடம்பொடு நின்று அங்கே அரிய தவத்தைச் செய்ய விரும்புவர். அத்தவத்தின் பயனாக ஞானத்தைப் பெற்றுச் சிவனடியையும் சேர்வர், அதற்குச் சிவனது அருளை அவர் முன்னர்ப் பெறுதலுடையவரேயாவர்.Special Remark:
``ஈசனியோ கக்கிரியா சரியையினில் நின்றோர்ஊனமிலா முத்திபதம் பெற்றுலக மெல்லாம்
ஒடுங்குமபோ தான்முனிவா தொழியினுற்பவித்து
ஞானநெறியடைந்தவர் சிவனை``
எனவும்,
``அங்கு நாதனே முன்னிற்கின் நணுகுவர்நற்றாளே`` 8
எனவும் உணர்த்தினமை காண்க.
இதனால், `எத்தகையோரும் தவத்தால் சிவனருளைப் பெற்றே ஞானத்தைப் பெறுவர்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage