
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 7. அருளுடைமையின் ஞானம் வருதல்
பதிகங்கள்

கதிர்கண்ட காந்தம் கனலின் வடிவாம்
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாம்
சதிர்கொண்ட சாக்கி சரியன் வடிவாம்
எதிர்கொண்ட ஈசன் எழில்வடி வாமே.
English Meaning:
God is BeautyForm within Sun-Stone is red hot ember,
Form within Moon-Stone is pearly drop of water,
Form within Fire-Stone is crackling fire,
Form of Lord that holds fire aloft
Is Beauty Surpassing.
Tamil Meaning:
சூரியனைக் கண்ட சூரியகாத்தக்கல் நெருப்பு வடிவாய் நெருப்பை உமிழும். சந்திரனைக் கண்ட சந்திரகாந்தக்கல் முத்துப்போலும் நீர் வடிவாய் நீரை உமிழும். பெருமைபொருந்திய கண் ஆடி எதிர்ப்பட்ட வழியின் வடிவாம். சிவனை உள்ளத்தில் ஏற்றுக் கொண்ட உயிர்கள் அந்தச் சிவன் வடிவேயாம்.Special Remark:
`கண்ணோடு கூடியது` என்னும் பொருட்டாகிய `சாக்ஷி` என்னும் வடசொல், இங்கு `சாக்கி` எனத்தற்பவமாயிற்று. கண்ணுக்கு உதவியாக அணியப்படும் ஆடியை `உபநேத்திரம்` என்பர், அது வழியை நன்கு தெரிவிப்பதாய் அவ்வழிவடிவாய் நிற்கும், சரி - வழி, `எரியின் வடிவாம்` என்பது பாடமன்று. ``எதிர் கொண்ட`` என்பது அன்பெறாத அகர ஈற்றுப் பலவறி சொல், அஃது உயிர்களைக் குறித்து நின்றது. ``ஈசன்`` எனப் பின்னர் வருகின்றமை யின், வாளா, `எதிர்கொண்டன` என்றார். இங்கும், `எரிகொண்ட` என்பது பாடமன்று. ஈசன் வடிவு அவன் அருளேயாதல் அறிக. இறைவனை உணரும் உயிர் அவனது அருள்வடிவாதல் இனிது விளங்குதற்குக் கதிரவனை எதிரேற்ற சூரிய காந்தக்கல் முதலியவற்றை ஒப்புமைக் கூட்டமாக உடன் வைத்து விளக்கினார்.இதனால், இறைவனை அருளைப் பெற்ற உயிர் அடையும் சிறப்புக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage