
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 7. அருளுடைமையின் ஞானம் வருதல்
பதிகங்கள்

பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே.
English Meaning:
Fruits of Lord`s GraceIf you have Lord`s Grace, you have all riches;
If you have Lord`s Grace, you have true Jnana;
If you have Lord`s Grace, you have greatness too;
If you have Lord`s Grace, you shall be the great God Himself.
Tamil Meaning:
(இதன் பொருள் வெளிப்படை)Special Remark:
பிரான் - சிவபிரான். நற்செல்வம் - அறத்தாற்றின் வரும் செல்வம். நன்ஞானம் - ஐயமும், திரிபும் இல்லாத மெய்ஞ் ஞானம். பெருந்தன்மை - வியாபக நிலை `தெய்வம்` என்றது, தெய்வ நிலையை. பெருந்தெய்வ நிலைகளாவன அயன் மால் உருத்திரரது நிலைகள். இதனானே, `மந்திகேசுரர், அணுசதாசிவர்` என்போரது நிலைகளும் உளவாதலை இனம் பற்றிக்கொள்க. ``அருளின்`` இரண்டும், `அருள் பண்ணினால்` என்றவாறு. ``அருள் உண்டெனின் உண்டு`` எனவும், ``அருள் பண்ணினால் உண்டு`` எனவும் கூறியதனால், `அவை இல்லையாயின் யாதும் இல்லையாம்` என்பது போந்தது,``அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளு மாவ தெனக்கு``
-அற்புதத் திருவந்தாதி - 9
அம்மை திருமொழியும் காண்க.
இதனால், சிவன் அருள் செய்தவழியல்லது யாதும் உளதாகாமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage