
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம்
பதிகங்கள்

நெஞ்சு நினைந்து தம் வாயாற் பிரான்என்று
துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று
மஞ்சு தவழும் வடவரை மீதுறை
அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே.
English Meaning:
Siva`s Five Letter Mantra is the Final RefugeThink of Him in your heart,
Praise Him as ``My Lord``
When Death approaches you, say;
``Lord, You alone are my Refuge;``
Then will you receive
The Grace of Lord in Letters Five seated,
The Lord who resides
In the snow-clad mountain of North (Kailas).
Tamil Meaning:
மேகங்கள் தவழும் வெள்ளி மலையில் வீற்றிருகின்ற இறைவனை திருவைந்தெழுத்து வழியாக நெஞ்சால் நினைதலும், வாயால், `தலைவனே` என்று சொல்லி வாழ்த்துதலும், இறக்கும்பொழுது, `உனது திருவடியே புகல்` என்று சொல்லியும் நின்றால் அவ்விறைவனது அருளை எளிதில் பெறலாம்.Special Remark:
``அஞ்சில்`` என்பதில், இல், ஏதுப் பொருள்கள் வந்த ஐந்தாம் உருபு. இதனை முதலிற் கொள்க. இதற்குப் பிறவாக உரைப்பன இவ்விடத்திற்கு இயையா. ``வாயால்`` என்பதனோடு இயைய, `நெஞ்சால்` என உருபு விரிக்க. ``என்று`` இரண்டின் பின்னும் வருவிக்கப்பட்ட சொல்லெச்சங்கள் காரணப் பொருளவாய், `பெறலாம்` என்பதனோடு முடித்தன.இதனால், திருவைந்தெழுத்தான் சிவனது திருவருளைப் பெறுதல் எளிதாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage