
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 4.துறவு
பதிகங்கள்

தூம்பு திறந்தன்ன ஒம்பது வாய்தலும்
ஆம்பற் குழலி னகஞ்சுளிப் பட்டது
வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற்
கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே.
English Meaning:
The Yogi Espied the Mystic Flower in the CraniumThe Mystic Exit opened,
And the nine orifices were sheathed in armour
Of Sakti of lily-wreathed tresses;
The Captain that is the breath of life
Climbed the mast of Negation Bitter,
And looked atop from the cranium roof;
And lo! beheld the budded vine bloom,
As in temple lofty and sacred.
Tamil Meaning:
ஓர் ஆம்பற் குழலினுள்ளே, அங்கணத்தை (சலதாரையைத்) திறந்தாற்போலக் காணப்படும், ஒன்பது புழைகளும் அடங்கி அடைபட்டன. அதனால், மாலுமி வெளியே பார்ப்பதற்கு வேறு வழியில்லாமல், வேம்பினால் ஆகிய தன் மரக்கலத்தின்மேலே ஏறியபொழுது பாய்மரத்தைச் சுற்றிய தாமரைக்கொடி ஒன்று அம்மரக் கலத்தின் கூரையில் பூத்தலைக் கண்டான்.Special Remark:
``ஆம்பற் குழல்`` என்பதும், ``கூம்பு`` என்பதும் முதுகந் தண்டினையும், `ஒன்பது புழைகள்` என்பது உடம்பின் நவத் துவாரங் களையும், ``மீகாமன்`` என்பது உடம்மை நடத்தும் உயிரையும், `தாமரைக் கொடி` என்பது முதுகந்தண்டைச் சூழ்ந்துசெல்லும் சுழு முனா நாடியையும், `அதன்மலர்` என்பது ஆயிரஇதழ் மலரையும் கொள்ள நிற்றலின், இதுவும் பிசிச்செய்யுளாம். `பிராணாயாமத்தால் பிராணன் சுழுமுனையடியில் கும்பிக்கப்பட்ட பின் உடம்பின் நவத் துவாரங்களாலும் காற்றும், அதன்வழி மன உணர்வும் புறப்படா தொழிய அவ்வுணர்வு ஆறு ஆதாரங்களையும் கடந்து சென்று, ஆயிர இதழில் சத்தியைக் கண்டது` என்பது இம்மந் திரத்தாற் குறிக்கப்பட்ட பொருள். இந்நிலை துறவர்க்கல்லது ஆகாது` என்பது உணர்த்தற் பொருட்டு இஃது இவ்வதிகாரத்துட் கூறப்பட்டது.``பட்டது`` என்பது பன்மை ஒருமை மயக்கம். ``வேம்பு`` என்பது கருவியாகுபெயராய், `அம்மரத்தாற் செய்யப்பட்ட மரக்கலம்` எனப் பொருள்தந்தது. `உடல் வெறுக்கத்தக்கது` என்பதை உணர்த்த, சந்தனத்தாலாகிய மரக்கலம்` என்னாமல், `வேம்பினால் ஆகிய மரக்கலம்` என்றார்.
இதனால், துறவறம் யோகத்தைப் பயந்து, அது வழியாக ஞானத்தையும், பின் வீட்டையும், தருதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage