
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 4.துறவு
பதிகங்கள்

நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில்முட் பாயும்
நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில்முட் பாயகி லாவே.
English Meaning:
The Renunciate Shall Walk along the Straight PathHe laid the path, and planted the thorns along;
When you from the path deviate
The thorns of temptation shall prick you;
They that deviate not,
Them the thorns prick not.
Tamil Meaning:
(இம்மந்திரம் பிறிது மொழிதல். இதன் நேர்பொருள் வெளிப்படை.)இதன் குறிப்புப்பொருள்:- அறநெறியை வகுத்துணர்த்திய இறைவனே மறநெறியையும் வகுத்துணர்த்தினான். அதனால், அறநெறியின் வழுவியவழி மறநெறி உளதாய்த் துன்பம் விளைக்கும். ஆகவே, அறநெறியின் வழுவாது ஒழுக வல்லவர்கட்கு அந்நிலையில் மறநெறி தோன்றித் துன்பம் விளைக்க மாட்டாது.
Special Remark:
`அந்நிலை துறவோர்க்கே முற்ற முடியும்; அதனால், துறவைப் பெறுக` என்பது கருத்து ``படைத்தான்`` இரண்டில் முன்னது வினைப்பெயர்; பின்னது முற்று. முன்னதில் தேற்றேகாரம் தொகுத்தல் பெற்றது.இதனால், துறவே துன்பம் துடைப்பாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage