
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 23. கல்வி
பதிகங்கள்

ஆய்ந்துகொள் வார்க்கரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூல்ஏணி யாமே
English Meaning:
Those who meditate on the Lord become effulgent,Even as the sunstone radiates luminous sparks,
The education we acquire will help us
To meditate in the spiritual field of the moon.
Tamil Meaning:
பகலவனது கதிர்கள் எங்கும் பரவி நிற்பினும் தூயதாகிய சூரியகாந்தக் கல்லே அதனால் நெருப்பை உமிழ்வதாகும். அதுபோல, இறைவன் திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் கற்றவரே அத்திருவருளால் இறைவனைக் காண்பவராவார். ஆகவே, இளம்பிறையை அணிந்த சிவபெருமானை அடையும் ஆற்றலுடை யார்க்குப் பொருந்திய மனம் நிறைந்த மெய்ந்நூல்களே ஏணிபோல உதுவுவனவாம்.Special Remark:
எடுத்துக்காட்டுவமையாய் நின்ற இரண்டாம் அடியை முதலில் கொள்க. ``வெளிப்படும்`` என்றாராயினும், உவமைக்கேற்ப `வெளிப்படக் காண்பர்` என்றல் கருத்து என்க. தோய்ந்த நெருப்பு - சூரிய கிரணத்தில் தோய்ந்ததனால் உண்டாகிய நெருப்பு. ``இளமதி`` என்பது, ``கனங்குழை`` (குறள், 1081) என்றாற்போல அதனை யுடையான் மேல் நின்றது.இதனால், மெய்நூற் கல்வியது இன்றியமையாமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage