
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 23. கல்வி
பதிகங்கள்

நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினாற் பண்பின் பயன்கெடும்
கோலொன்று பற்றினாற் கூடா பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே.
English Meaning:
Those who fail to scale the heights with holy books to guide,If to outer things of life they yield, fruitless is all the lore;
On rod of Vairagya lean, and away fly the Birds of Desire;
And yet, men to Ignorance clinging in stupor ever lie.
Tamil Meaning:
வருந்தியாயினும் நூல் ஏணியைப்பற்றி ஏறுவோர் மதிலின் உச்சியை அடைந்து கோட்டையைப் பிடிப்பர். அது செய்ய மாட்டாதார் பக்கத்தில் உள்ள சில வழிகளைப்பற்றி ஏறின் இடையே நின்று பயன்பெறார். அதுபோல நுண்ணிதாயினும் மெய்ந்நூல்களுள் ஒன்றைப் பற்றி ஒழுகுவோர் ஆன்ம லாபமாகிய முடிந்த பயனைப் பெற்று இன்புறுவர். அது மாட்டாது அயலாகிய மயக்க நூல்களுள் ஒன்றைப் பற்றி ஒழுகுவோர் பிற சில சிறுபயன்களைப் பெறுதலோடு ஒழிவர்; ஆன்ம லாபத்தைப் பெறார். இன்னும் ஓர் உணவுப் பொருளைக் காப்பவர் கையில் கோல் ஒன்றை உடையாராய் இருப் பின் அப்பொருளைக் கவர எண்ணும் பறவைகள் அணுக மாட்டா. அதுபோல மெய்யறிவு உடை யாராய் இருப்பாரது மனத்தை ஐம்புலன் கள் அலைக்க அணுகா. இவற்றையெல்லாம் அறியாது மக்கள் அறியாமையுள் நின்று மயங்கு கின்றார்களே, இஃது இரங்கத்தக்கது!Special Remark:
இத்திருமந்திரம் ஒட்டணி. ``மயங்குகின்றார்களே`` என்ற தேற்றேகாரம், இரக்கங் குறித்து நின்றது.இதனால் மயக்க நூற்கல்வியது குற்றம் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage