
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 23. கல்வி
பதிகங்கள்

கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பரம்பரிந் துண்கின்றார்
எல்லியுங் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமு மாமே.
English Meaning:
Men of Learning abandon the fettering, worldly waysThe firm of mind flourish high on coiling snake-like Kundalini
Night and `day, unremitting praise the Lord,
And so your body, as on herbs alchemised, with glory of youth will be.
Tamil Meaning:
கல்வியைக் கற்றவர்களிலும் சிலர் (அதன் பயனாகிய இறைவழிபாட்டினைக் கொள்ளாமையால்) வாளா இறந்தொழி கின்றனர். இனிக் கற்றதன் பயனாகிய இறைவழிபாடு உடையவர் இறையின்பத்தை இப்பொழுதே அன்பினால் நுகர்கின்றனர். ஆகையால், கல்வியைக் கற்கின்ற நீவிர் இரவும் பகலும் இறைவனைத் துதியுங்கள். அவ்வாறு துதித்தால் அவனது சத்தி உள்நின்று தாங்குவ தாகிய அருள் உடம்பும் உங்கட்குக் கிடைக்கும்.Special Remark:
`கல்வியுடையாரும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. பல்லி - பலிதம்; பயன். `பாம்பரிந் துண்கின்றார்` என்பது பாடம் அன்று என்பதற்கு, யாப்புச் சிதைதலே சான்று.இதனால், கல்வியின்வழி நிற்குமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage