
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம்
பதிகங்கள்

அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணந்
தங்கி இருக்கும் தகையருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே.
English Meaning:
In true penance striving, to Vedic rites conformingThey, who everywhere raise the sacrificial flame,
Tireless, unsparing in kindling the Holy Fire-
Theirs the true flame eternal, theirs the undying name.
Tamil Meaning:
வேள்வியை ஒழியாது வேட்கும் அந்தணர், வேத வழக்கு இவ்வுலகில் அழிந்தொழியாதவாறு காப்பவராவார். அவ்வேள்வியை எங்கும் நிகழச் செய்யுமாற்றால் அவர்க்கு மெய் வருத்தம் பெரிதாயினும், இவ்வுலகில் எங்கும் மிக்கு விளங்குமாறு அவர் நிலைநாட்டும் புகழ் அச்செயலேயாம்.Special Remark:
`முத்தீ வழியாக அன்றிப் பிறவாற்றால் சிவ பெருமானை அடைதல் கூடுமாயினும், முத்தீ வேள்வி வேட்கப்படா விடின், வேதவழக்கு மறைந்தொழியும்; அது மறைந்தொழியின், கடவுட் கொள்கையும், சிவபத்தியும் போல்வன பலவும் அவ்வாற்றானே மறைந்தொழியும்; ஆகவே அவ்வாறெலாம் நிகழாமைப் பொருட்டு முத்தீ வேட்டல் பேணற்பாற்று` என்பதாம். எனவே, `சங்க இலக்கியம், திருக்குறள் முதலிய தமிழ் நூல்களிலும், சிவாகமம், திருமுறை முதலிய சைவ நூல்களிலும் முத்தீ வேள்வி சிறப்பிக்கப் படுதலும் இது பற்றி` என்பது இனிது விளங்குவதாம்.இதனால், அக்கினி காரியம் மரபு நிலையாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage