
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம்
பதிகங்கள்

ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத் துளங்கிக் குரைகடல் தானே.
English Meaning:
Inside the Fire of the Homa is my Lord,Inside too is He seated in the flame of the funeral pyre
The two Fires in the sky, the Sun and the Moon,
The Fire of the Homa checks the sea of karma from expanding.
The Fire, that the mighty Churner in the sea begot, abides.
Tamil Meaning:
வேள்வித் தீக்கு உள்ளீடாய் நிற்பவன் எங்கள் சிவபெருமானே; அஃது, அவன் சுடுகாட்டில் தீயில் நின்று ஆடி, சிறந்த உயிரைத் தாங்கி நிற்றலானே அறியப்படும். இவ்வுண்மையை உணராது, உணர்த்துவாரையும் வெகுள்வாரது வெகுளியின்கண் உளதாகின்ற தீயால் விளையும் வினைக்கடல், மந்தரமாகிய பெரிய மத்தால் கலங்கி ஒலித்த கடல் போல்வதாம்.Special Remark:
`ஆகவே, அவ்வினைக்கடல் கடத்தற்கரியது` என்ற படி. `ஈமத்துள் அங்கி உளன்` என இயையும். இரதம் - சாரம்; என்றது உடலினின்றும் நீங்கிய உயிரை. கொள்ளுதல் - தாங்கிக் கொள்ளுதல். `அதனுள்` என்பது, `அத்துள்` என மருவிற்று. கோ மத்து - பெரிய மத்து. `மத்து` என்பது கடைக்குறைந்து நின்றது. `மத்தால்` என உருபு விரிக்கப்பட்டது. \\\"வினைக்கடல் குரைகடல் தானே`` என்றது, \\\"மாதர் வதன மதியம் - உதய மதியமே ஒக்கும்` (தண்டியலங்காரம்) என்பதிற் போல உருவக உவமை.இதனால், `சிவபெருமானை வணங்கா தொழியினும் இகழ்தல் கூடாது; இகழின் உய்தியில் குற்றமாம்` என, வேள்வி செய் வார்க்கு இன்றியமையாததோர் அறம் கூறப்பட்டது. இதற்குத் தக்கன் வரலாறு சிறந்த சான்றாதல் அறிக.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage