
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம்
பதிகங்கள்

ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகி என்னுள்ளத் திருக்கின்ற
கண்சுட ரோன்உல கேழுங் கடந்தஅத்
தண்சுடர் ஓமத் தலைவனு மாமே.
English Meaning:
The Pure Flame is He, the immortal Lord is He,The Rediant Flame who in my heart`s core resides,
The Lord whose eyes are the Three Fires,
Who the Seven Worlds transcends,
The Lord of Homa`s Cool Flame, and my heart`s kin besides.
Tamil Meaning:
எல்லா ஒளிகட்கும் மேலான ஒளியாய் இருப் பவனும், இறப்பில்லாத முதல்வனும் ஆகிய அவனை நினைத்தால், ஒளி பெற்றுத் திகழ்கின்ற எனது உள்ளத்தில் வீற்றிருக்கின்ற, முச்சுடர் களையே மூன்றுகண்களாக உடைய அப்பெருமானே உலகங் கடந்த தண்ணிய ஒளிப்பொருளாகிய முதற்பொருளும், வேள்விக்குத் தலைவனும் ஆவன்.Special Remark:
இங்குக் கூறியவாறே திருநாவுக்கரசரும்,அண்டம் ஆரிரு ளூடு கடந்தும்பர்
உண்டு போலும்ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறி வார்! அறி வாரெலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே. -தி.5 ப.97 பா.2
என ஓதியருளுதல் காண்க. சிவபெருமான் வேள்வித் தலைவன் ஆதலை விளக்குதற் பொருட்டு அவனது முதன்மையை எடுத்துக் கூறினார். ``நினைத்தால்`` என்னும் சொல்லெச்சம் முன்னை மந்திரத் தினின்றும் வந்தது.
இதனால், வேள்வியைச் சிவநெறி வேள்வியாக வேட்டற்கு வழி கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage