
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை
பதிகங்கள்

அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விகொ டுமின் தலைப்பட்ட போதே.
English Meaning:
Share With Others Before You EatSpeak not in envy, stray not form the Dharmic way,
Covet not other`s riches with lustful greedy glances;
With heart to pity attuned, as you sit down to eat,
Share with others before the feast commences.
Tamil Meaning:
வாய்ப்பு நேரும்பொழுது அது கிடைத்துவிட்ட தென்று புறங்கூறிப் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள். தீக்குணம் உடையாராய்ப் பிறர் பொருளைக் கள்ளாதீர்கள். நற்பண்பு உடையாராய் உயர்ந்து, உண்ணும்போது சிறிதாயினும் பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள்.Special Remark:
`இந்நெறியில் நின்றால் நிலையாமை நீங்கி இன்பம் பெறலாம்` என்பது குறிப்பெச்சம். அவ்வியம் - பெறாமை. அது, \\\\\\\"பேசி`` என்றதனால், அதனால் வரும் புறங்கூற்றைக் குறித்தது. \\\\\\\"வெவ்வியர், செவ்வியர்`` என்பன இடவழுவமைதி. `வெவ்வியன், செவ்வியன்` என்பன பாடமாயின், பன்மை ஒருமை மயக்கமாகவும் கொள்க. தவ்வி - சிறிது. \\\\\\\"யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி`` எனப் பின்னரும் அருளுவார். `செவ்வி தலைப்பட்ட போது` என ஒரு சொல் வருவித்து முதலிற் கூட்டுக. `தவ்விக் கொடுண்மின்` என்பது பாடமன்று.இவ்விரண்டு திருமந்திரங்களாலும், `உணர்வு நிலை யாமையை உணர்ந்து நிலைபெறுதற்குரிய நெறியில் நிற்றல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage