
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை
பதிகங்கள்

ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரே.
English Meaning:
When Death`s Summons Come, the Five Senses Desert the BodyOne field lay ready and ripe for the Five Senses to work,
The Five, that one field watched and tilled;
But when the grim summons came form the Lord of death,
All the Five for ever fled and quit the field.
Tamil Meaning:
உடையான் ஒருவனால் ஐவர் உழவர்க்கு ஒரு நிலம் விளைவு செய்ய விடப்பட்டது. அவ் ஐவரும் அதனை நன்றாகவே பேணி வந்தமையால், அந்நிலமும் நன்றாகவே விளைவைக் கொடுத் தது. ஆயினும், உடையான் அந்நிலத்தை மாற்றக் கருதி அவர்களை விலகுமாறு ஓலை விடுத்தமையால், அவ் ஐவரும் அந்நிலத்தைக் கைவிட்டனர்.Special Remark:
`அந்நிலையில் அந்நிலம் விளைவைத் தருதல் எவ்வாறு` என்பது குறிப்பெச்சம். ஐவர், ஐம்பொறிகள், செய், உயிர், விளைதல், உணர்வு நிகழப்பெறுதல். நாயகன், சிவன். ஓலை, ஆணை; நியதி தத்துவத்தின் செயல். ``காவல் விட்டார்`` என்ற அளவே கூறினமையின், `பொறிகள் ஆற்றல் அடங்கின` என்ற அளவே கொள்க. உயிர் உளதாகவும் பொறிகள் அடங்கின் உணர்வு ஒழிதல் காட்சியானே உணரப்படுதலின், ஒரு பொறியன்றி ஐம்பொறியின் வயப்பட்டு நிற்கும் உணர்வு ஒரு நிலையதாதல் எவ்வாறு` என்பது கருத்து. ஓர் உணர்வு ஐம்பொறியின் வயப்பட்டுப் பலவாறாகச் சிதறுண்டலால் வரும் துன்பத்தினை மாணிக்கவாசகர்,``ஆனைவெம் போரில் குறுந்தூறெனப் புலனால் ஆலைப் புண்டேன்``
எனவும்,
``எறும்பிடை நாங்கூ ழெனப்புல னால் அரிப்புண்டலந்த
வெறுந்தமியேன்`` தி.8 நீத்தல் விண்ணப்பம் - 21,25.
எனவும் விளங்க ஓதினார். இன்னும்,
``அஞ்சினால் இயற்றப் பட்ட ஆக்கைபெற் றதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்கப் பட்டிங் குழிதரும் ஆதனேன்``
-தி.4 ப.26 பா.5
என அப்பரும்,
``ஐவர் கொண்டிங் காட்ட ஆடி ஆழ்குழிப்பட்டழுந்து வேனுக்கு
உய்யு மாறொன் றருளிச் செய்யீர் ஓண காந்தன் தளியுளீரே``
-தி.7 ப.5 பா.1
என ஆரூரரும் அருளிச்செய்தலும் காண்க.
பொறியின்றி ஒன்றும் புணராத புந்திக்கு
அறிவென்ற பேர்நன் றற. -திருவருட்பயன் - 15.
என்றதும் உயிர் உணர்வு தன்வயமுடைத்தாய் நிலை நில்லாமை பற்றியேயாம்.
``ஒருபுலன் நுகரும் போதங் கொன்றிலை; ஒன்றன் பாலும்
வருபயன் மாறி மாறி வந்திடும்; எல்லாம் மாறும்
ஒருபொழுது``
என்னும் சிவஞான சித்தி (சூ. 2.94)ச் செய்யுள் இவ்வுணர்வு நிலையாமையை இனிது விளக்குதல் காண்க.
இதனால், உணர்வு நிலையாமை, இறுதிக்கால நிகழ்ச்சியாகிய காட்சியின் வைத்து உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage