
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை
பதிகங்கள்

மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை
கூறும் கருமயிர் வெண்மயி ராவதும்
ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே.
English Meaning:
Everything decaysEven a fine woven cloth gets torn after a time,
The dark locks turn grey,
The year begins and ends,
This truth we do not realize,
Tamil Meaning:
பாவும், உண்டையுமாக மாறிக் கூடும் இழைகளை நன்கு செப்பம் செய்து ஆக்கி விலைவரம்பு செய்கின்ற பட்டாடைகள் என்றும் அவ்வாறே இருப்பதில்லை: என்றாயினும் நைந்து கிழிவதை அனைவரும் காண்கின்றனர். அதுவன்றியும் குறிக்கப்படுகின்ற ஒரு நாளை ஓர்யாண்டின் முடிவாகவும், மற்றொரு நாளை அடுத்த ஆண்டின் தொடக்கமாகவும் கொண்டு ஒவ்வொரு வர்க்கும் கழிகின்ற ஆண்டுக் கணக்கே அவர்க்கு `விரைவில்` நரை வரும்` என்பதை அறிவிக்கும். அவையெல்லாம் இருந்தும் மக்கள், `தம் அறிவும் ஆற்றலும் இன்றுள்ளவாறே என்றும் இருக்கும்` என்று மகிழ்ந்திருக் கின்றனர். இன்னதோர் அறியாமை இருந்தவாறு இரங்கத் தக்கது!Special Remark:
மாறு, முதனிலைத் தொழிற்பெயர். அஃது ஆகு பெயராய், அதனை உடையவற்றைக் குறித்தது. \\\\\\\"கூறும்`` என்பதனை மூன்றாம் அடியின் இறுதியிற் கூட்டி, அவ்வடி முழுவதையும் இறுதியின் வைத்து உரைக்க. `ஈற்றினாலும்` பிறப்பினாலும்` என்னும் உம்மைகள் தொகுத்தலாயின. `ஓர்யாண்டின் இறுதிநாளை அடுத்த மற்றோர் யாண்டின் முதல்நாள் தொடங்கிவிடுகின்றது` என அவற்றின் இடையறாமையை உணர்த்தற்கு ஈற்றினை முன்னர்க்கூறினார். `அதனைப் பெரிதறிவாரில்லை` என்னும் அத்தொடரினைப் பின்னும், \\\\\\\"கூறும்`` என்பதனுடன் கூட்டுக. இளமைக் காலத்துள்ள உணர் வாற்றல் முதுமைக் காலத்துத் தளர்ச்சியுறும் என்றவாறு.இதனால், உணர்வு நிலையாமை மூப்பினது இழிவுணர்த்து முகத்தால் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage