
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை
பதிகங்கள்

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ தறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே.
English Meaning:
Before Youth Passes, Praise Him in SongsIn the days assigned to you, before youth passes,
In songs of praise to the Lord, pour out your heart;
In the days to me assigned, wasting not the minutes away,
In the days to me assigned, I, seeing all, remained apart.
Tamil Meaning:
மக்களுக்கென்று பொருந்திய நூற்றியாண்டின் எல்லைக்கு இடையே கூற்றுவன் வந்து அதனை அறுத்துச் செல்லுதலைப் பலர் அறியாது வாழ்ந்து, அக்கூற்றுவன் வந்தபொழுது துயருற்றமையை நான் எனது வாழ்நாளில் பன்முறை கண்டிருக் கின்றேன்; ஆதலால், வாழ்தல் பொருந்திய நாளில் இளமை நீங்கும் முன்பே அது பொருந்தி நிற்கின்ற நாட்களில் சிவபெருமானைப் பண்ணினால் பாடித் துதியுங்கள்.Special Remark:
`பலரும் முதுமைவந்த பிறகுதான் இறப்பர்` என்ற கட்டளை இன்மையால், இளமையிலே சிவனைப் பெறுதல் வேண்டும்` என்றபடி.``அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க``
என்று திருக்குறளிலும் (36),
மற்றறிவாம் நல்வினை யாம் இளையம் என்னாது
கைத்துண்டாம் போழதே கரவா தறம்செய்மின்
முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.
என்று நாலடி நானூற்றிலும் (பா.19) கூறப்பட்டமை காண்க.
இதனால், இளமை நிலையாமையை உணர்ந்து இளமைக் கண்ணே சிவனைப்பெற முயலல் வேண்டும் என்பது முடித்துக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage