
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை
பதிகங்கள்

பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே.
English Meaning:
The Body Perishes with the sensesThe five senses dwell inside the body,
They may leave it any time,
If the five senses become usteady,
The body which is the container of the senses also perishes.
Tamil Meaning:
நூலால் தைக்கும் நுண்ணூசிபோலாது, சணற்புரியால் தைக்கின்ற பருவூசிகள் ஐந்தும் ஒரு சணற்பைக்குள் இருக்கின்றன. அவை பருவூசியாயினும் பறக்கும் தன்மை வாய்ந்த யானைகளாம். அத்தன்மையவான அவை மெலிவடையுமாயின், அவை தங்கியுள்ள பையும் பறக்கின்ற தன்மையை உடையதாகிவிடும்.Special Remark:
பொருள்களை அறியும் அறிவுடைப்பொருள் உயிரே யாகலின் அதனை, `நுண்ணூசி` என்று வைத்து, அதற்கு வாயி லாய் நிற்றலின் தாமே அறிவுடையனபோலத் தோன்றுகின்ற ஐம்பொறி களைப் ``பருவூசி`` என்றார். ``பை`` என்றது உடம்பை. அறியு மாற்றால், `ஊசி` எனத்தக்க ஐம்பொறிகள் தாமே அடங்காது புலன்கள் மேற் செல்லுமாற்றால் `யானை` எனப்படுமாகலானும், `அவ்வாற்றால் அவை யானை எனப்படினும், புலன்களைச் சென்று பற்றும் விரைவு பற்றிப் பறவையாகவும் கூறுதற்கு உரிய` என்பார், `பறக்கும் விருகம்` என்றார். விருகம் - `மிருகம்` என்பதன் சிதைவு. ``பல்விருகமாகி`` (தி.8 சிவபுராணம்) எனத் திருவாசகத்தினும் வந்தது. `மிருகம்` என்றது ஏற்புழிக் கோடலால் யானையாயிற்று. ``ஆக மதத்தன ஐந்து களிறுள`` (தி.10 -5 ஆம் தந்திரம்). என்பது போல ஐம்பொறிகளை யானையாக உருவகித்தல் பெரும்பான்மை யாதல் அறிக. பனித் தல் - நடுங்கல்; தளர்ச்சி. பொறிகள் புலன்களைக் கவரும் ஆற்றலை இழப்பின் உடல் இறந்ததோடு ஒக்குமாதலின் `பரு வூசி ஐந்தும் பனித் தலைப் பொருந்தினால் பையும் பறந்தது போல்வதே` என்றார். எனவே, `அவைமெலிதலாகிய முதுமை வருதற்கு முன்னே ஈசனை நினைக` என்பதாம்.இதனால் `இளமையது நீக்கம் உடல் நீக்கத்தோடு ஒக்கும்` என அதனது இன்னாதநிலை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage