
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை
பதிகங்கள்

ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருங்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.
English Meaning:
The Sixteen Kalas are Within; Why Then the Grave?We pitiable creatures do not think,
Of the Lord who dwells within with sixteen Kalas
Then we wonder why we enter the mother`s womb,
And later pass away again and again.
Tamil Meaning:
பதினாறு கலைகளும் ஒருசேர வந்து நிரம்பப் பெற்ற நிறைமதி, பின்பு சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைவதைப் பார்த்திருந் தும், `இளமை நிலையாது` என்பதைக் கீழ்மக்கள் நினைக்கின்றார்கள் இல்லை. (அதன் பயனாக அவர்கள் இளமையுள்ள பொழுதே உயிர்க்கு உறுதி தேடிக் கொள்ளாமையால்) அவர்களது தீவினை பற்றிச் சினங் கொள்கின்ற கூற்றுவன் அவர்களை நரகக் குழியில் தள்ளிய பின்பு அதில் சென்று வீழ்ந்து துன்புறுதலைத் தவிர, அத் துன்பத்தினின்றும் நீங்கும் வழியை அவர் அறியமாட்டுவாரல்லர்.Special Remark:
``ஈரெண்கலை`` என்றதனால், `அதனை ஒருங்கு பெற்று நின்றது திங்கள்` என்பது விளங்கிற்று, ``நின்றது`` என்றது அதன் நிலைமையைக் குறித்த ஆகுபெயர். ``கருங்குழி`` என்றது `இருட்குழி` என்றவாறு. `கருக்குழி` எனப் பாடம் ஓதுதல் இவ் இடத்திற்கு ஏலாமை அறிக.இதனால், இளமை சிறிது சிறிதாகக் கழியும் முறைமை உவமையில் வைத்துக் காட்டப்பட்டது.
``தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்
அறியா தோரையும் அறியக் காட்டித்
திங்கட் புத்தேள் திரிதருள் உலகத்து``
என்னும் புறநானூற்று (27) அடிகள் இதனோடு ஒருவாற்றான்வைத்து ஒப்புநோக்கத் தக்கன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage