
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை
பதிகங்கள்

தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே.
English Meaning:
While Life Still Throbs, Fix Your Mind on the LordWhen youth had danced its way to palsied age,
Scarce the chance to fill the years with good deeds more and more;
So while life still throbs, fix your mind on Nandi,
Into whose spreading locks
The holy waters of Ganga eternally pour.
Tamil Meaning:
சிறிது சிறிதாகத் தேய்ந்து முடிகின்ற இளமைப் பருவம், கடைசியில் மிக நுணுகி முடிந்துவிட்டபின்பு செயல்கள் யாவும் செய்தற்கரியனவாய் ஒழியும். (யாதொன்றும் செய்ய இயலாது என் பதாம்.) ஆதலால், நன்கு இயங்கத்தக்க இளமை உள்ளபொழுதே சிவ பெருமானது பெருமையை ஆய்ந்துணர்ந்து உள்ளத்திற் கொள்ளுங்கள்.Special Remark:
துணிவு பற்றி, ``ஒழிந்த`` என இறந்த காலத்தாற் கூறினார். அற்ற கங்கை - அடங்கிய கங்கையை உடைய. முதுமைக் காலத்தில் உயிர் செயலற்றுப்போதலின், அது செயலாற்றுதற்குரிய இளமைப் பருவத்தையே, ``உயிருள்ள போது`` என்றார். இதனால், முதுமைக் காலம் யாதொரு பயனையும் தாராத தாகலின், இளமை நிலையாமையை மறக்கலாகாமை கூறப்பட்டது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage