
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை
பதிகங்கள்

ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே.
English Meaning:
Even a Life-time is not Enough to Know HimThe years roll on; but none the Lord in his bosom holds,
None to probe and perceive Him profound;
Even if Time`s thread be to the utmost stretched,
Still they know not the spark that kindles all the lamps around.
Tamil Meaning:
மக்கள் பிறந்தபின் சில ஆண்டன்றிப் பல ஆண்டுகள் கழியினும், சிவபெருமானை அறிதலைக் கடனாகக் கொண்டு முயன்று அறிகின்றவர் யாரும் இல்லை. அவ்வாற்றால் இதுகாறும் நீடுசென்ற காலங்கள் இனியும் நீடுசெல்லுமாயினும், அவர் அவனை அறியமுயல்வாரல்லர்.Special Remark:
`ஆகவே, அவர் இளமை நிலையாமையை அறிவா ரல்லர்` என்பதாம். ``கழிந்தன`` என்றதன்பின், `எனினும்` என்பது வருவிக்க. பூண்டுகொள்ளுதல், கடனாக மேற்கொள்ளுதல். ``நீண்டன`` என்றது வினைப்பெயர். காலம் ஒன்றாயினும், நாள், திங்கள், யாண்டு முதலிய பாகுபாட்டால் பலதிறப்படுதலின், ``காலங்கள்`` எனப் பன்மையாற் கூறினார். ``கொடுக்கினும்`` என்ற உம்மை, எதிர்மறை. `பேரொளி உடையவன்` என்பார், சிவபெரு மானை, `தூண்டப்பட்ட விளக்கின் ஒளி` என்றார். ``தூண்டு சுடரனைய சோதி கண்டாய்`` (தி.6. ப.23. பா.1) என அப்பரும் அருளிச் செய்தல் காண்க.இதனால், உலகரது அறியாமை கூறுதல்போல, ஆண்டு தோறும் இளமை கழிந்து செல்லுதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage