
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- விநாயகர் வணக்கம்
- முதல் தந்திரம் - பாயிரம்
- முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
- முதல் தந்திரம் - 2. வேதச் சிறப்பு
- முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு
- முதல் தந்திரம் - 4. உபதேசம்
- முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை
- முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை
- முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை
- முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை
- முதல் தந்திரம் - 9. கொல்லாமை
- முதல் தந்திரம் - 10. புலால் மறுத்தல்
- முதல் தந்திரம் - 11. பிறன்மனை நயவாமை
- முதல் தந்திரம் - 12. மகளிர் இழிவு
- முதல் தந்திரம் - 13. நல்குரவு
- முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம்
- முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்
- முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை
- முதல் தந்திரம் - 17. வானச் சிறப்பு
- முதல் தந்திரம் - 18. தானச் சிறப்பு
- முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்
- முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம்
- முதல் தந்திரம் - 21. அன்புடைமை
- முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்
- முதல் தந்திரம் - 23. கல்வி
- முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்
- முதல் தந்திரம் - 25. கல்லாமை
- முதல் தந்திரம் - 26. நடுவு நிலைமை
- முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை
Paadal
-
1. கல்லா தவருங் கருத்தறி காட்சியை
வல்லா ரெனில் அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோருங்
கல்லா தவர் இன்பங் காணகி லாரே.
-
10. ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற
சோதி நடத்துந் தொடர்வறி யாரே.
-
2. வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறை
கல்லா தவர்கள் கலப்பறி யாரே.
-
3. நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்காள்
எல்லா வுயிர்க்கும் இறைவனே யாயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே.
-
4. கில்லேன் வினைதுய ரார்க்கும் அயலானேன்
கல்லேன் அரனெறி கல்லாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தின்உட்
கல்லேன் கழியநின் றாடவல் லேனே.
-
5. நில்லாது சீவன்நிலையன் றெனவெண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே.
-
6. விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்தங் கிருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே.
-
7. கணக்கறிந் தார்க்கன்றிக் காணவொண் ணாது
கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடா காட்சி
கணக்கறிந் துண்மையைக் கண்டண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.
-
8. கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன் அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே.
-
9. கற்றுஞ் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.