
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 25. கல்லாமை
பதிகங்கள்

ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற
சோதி நடத்துந் தொடர்வறி யாரே.
English Meaning:
The Being first, even to the immortals the Light Divine,The Light that devotees seek, the great God Supreme
Some proudly claim that learning well, they know Him truly well
Yet they catch not of His Light the faintest gleam.
Tamil Meaning:
உயிர்க்கு உயிராய் அவற்றது அறிவினுள் நிற்கும் பேரறிவாகிய முதற்பொருள், பெத்தம், முத்தி இருநிலையினும் அவ்வாறு நின்று நடத்தும் அருள் தொடர்பினை அநுபவத்தால் அறிய மாட்டாதார், `யாம் முதல்வனது இயல்பு அனைத்தையும் கல்வி கேள்விகளானே முற்ற உணரவல்லோம்` என்று கூறுவர்.Special Remark:
`அது நிரம்பாது` என்பது குறிப்பெச்சம். `உள்நின்ற சோதி` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. `ஆதிப்பிரான்` முதலிய நான்கும் முதல்வனது இயல்பை வகுத்தோதியவாறு. ஆதிப்பிரான் முதற்கடவுள்; வேறு பலரைத் தொழிற் கடவுளாக நிறுத்தி உலகை நடத்துபவன். அமரர்க்கும் பரஞ்சுடர் - தேவர்க்கும் நெறிகாட்டும் மேலான விளக்கு. சோதி - எல்லையில் பேரொளி. அடியார் தொடரும் பெருந்தெய்வம் - தன்னை அடைந்தவர் விடாது தொடர்தற்குக் காரணமான இன்பப் பெருக்கினை உடையவன். இதன்பின், `அவனை` என்பது எஞ்சி நின்றது.இதனால், கல்வியின் நிறைவாகிய அனுபவம் இல்லாதாரும் ஓராற்றாற் கல்லாதவரேயாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage