
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 25. கல்லாமை
பதிகங்கள்

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்தங் கிருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே.
English Meaning:
Just as there is the fruit of knowledge above,So too within us is the same fruit,
Not knowing this men search for and analyze,
Earthly fruits and thus exhaust themselves in useless writing.
Tamil Meaning:
நன்கு கனிந்து இனிதாகிய விளாம்பழம், வானளாவ உயர்ந்த கிளையிலே உள்ளது. அதனைக் கண் உடையவர் கண்டு தக்க வாற்றாற் பெற்று உண்டு களிக்கின்றனர். கண் இல்லாதவர் அதனைச் சொல்லளவால் அறிந்து நிலத்திலே கிடப்பதாக நினைத்து, உதிர்ந்து கிடக்கின்ற கருக்காய், வெதும்பிக் காய்ந்த பிஞ்சு முதலியவைகளைக் கையால் தடவி எடுத்து, `இத்துணைய` என்று எண்ணித் தொகையை மனத்துட் பதித்து, உண்டு பார்க்கும்பொழுது இனித்தல் இன்றிக் கைத்தும், புளித்தும் நிற்றலைக் கண்டு துன்புற்றொழிகின்றனர்.Special Remark:
`இந்நிலை கண் இல்லாமையான் ஆயதன்றோ` என்பது குறிப்பெச்சம். `முப்பத்தாறு தத்துவங்களையும், ஆன்ம போதத்தையும் கடந்து அப்பால் உள்ளது எல்லையில்லாத சிவானந்தமாகிய பேரின்பம்; அதனைக் கல்வி உடையவர் அறிந்து தவ ஞானங்களால் அடைந்து திளைக்கின்றனர்; கல்வி இல்லாதவர், பேரின்பம் ஐம்புலப் பொருள்களில் உள்ளதாக நினைத்து அவற்றைத் தத்தமக்கு இயலுந் திறத்தால் பல தொழில்வழி முயன்று ஈட்டித் தொகைபண்ணி, அத்தொகையை மறவாமைப் பொருட்டு ஏட்டிலும் எழுதிக் காத்து, அவற்றை நுகருமிடத்துப் பேரின்பம் பயவாது பெருந்துன்பத்தையும், சிறிது இன்பத்தையும் பயந்து நிற்றலை அறிந்து தளர்ச்சி எய்துகின் றார்கள்; இந்நிலை கல்லாமையான் ஆயதன்றோ! என்பது இதனாற் பெறுவிக்கப்பட்ட பொருள். இம் மந்திரம் பிசிச் செய்யுள்.ஐம்புலப் பொருள்களைத் தேடி இளைத்தலால் பயனில்லை; இறைவன் திருவடியை அடைதலே பயன் தருவது என்பதைத் திருநாவுக்கரசர்,
மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
ஓடி எய்த்தும் பயனிலை; ஊமர்காள்,
சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய
ஆட லான்அடி யேஅடைந் துய்ம் மினே.
-தி. 5 ப.77 பா.4 எனக் கல்லாதாரை நோக்கி இரங்கி அருளிச்செய்தமை காண்க.
``விண்ணினின்`` முதலிய மூன்றிலும் ஓர் இன், விரித்தல் பெற்றது. கண்ணினுள்ளே கலந்திருத்தல், கண்ணால் நன்கு காணப் படுதல். ``மண்ணினுள்ளே`` என்பதன்பின், `உளதாக` என்பது வருவிக்க. அடுக்கு, பலர் மதித்தலைக் குறித்தது. ``எழுதி`` என்பது, உவமைக்கண், ``இம்மை உன்தாள் என்றன் நெஞ்சத்து எழுதிவை`` (தி.4 ப.96 பா.6) என்பதிற்போலப் பதித்தலைக் குறித்தது. விளம்பழம், பழமாக உண்ணப்படுதலேயன்றித் தனியாகவும், கூட்டாகவும் அட்டுண்ணப் படுதல் முதலிய பயன் மிகுதி பற்றி அதனையே கூறினார்.
இதனால், கல்லாதார் பேரின்பம் பெறாமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage