
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 25. கல்லாமை
பதிகங்கள்

கணக்கறிந் தார்க்கன்றிக் காணவொண் ணாது
கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடா காட்சி
கணக்கறிந் துண்மையைக் கண்டண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.
English Meaning:
Without knowing the 36 tattvas and their scopeIt is not possible to have a vision of the Supreme,
Only by knowing the tattvas wisdom can dawn,
Only those are educated who go to the limits of the tattvas and have a vision of Reality.
Tamil Meaning:
நூல்களைக் கற்றறிந்தவரே அந்நூலறிவால் மெய்ப் பொருளின் இயல்பை உணர்ந்து, பரவெளியில் கலந்து நிற்கும் முறையையும் உணர்கின்றனர். ஆதலின், நூல்களைக் கற்றறியா தவர்க்கு அவை கூடாவாம்.Special Remark:
பின் இரண்டு அடிகளை முதலிற் கூட்டி, ``கல்வி கற்றறிந்தாரே`` என்பதனை முதலிற் கொண்டு உரைக்க. கணக்கு - நூல். அதனை, கீழ்க்கணக்கு, மேற்கணக்கு, கணக்காயர் முதலிய வழக்குக்களான் அறிக. ``உண்மை, அண்டம்`` என்பன `உண்மையைக் காண ஒண்ணாது, அண்டம் காட்சி கைகூடா` என முன்னரும் சென்று இயைந்தன. உண்மை - மெய்ப்பொருள். அஃது அதன் இயல்பைக் குறித்தது. அண்டம் - பரவெளி. ``கைகூடா`` என்ற பன்மை, பெறுவாரது பன்மை பற்றிவந்தது.இதனால், கல்லாதார் மெய்ந்நெறியை அறிதலும், அதன் பயனைப் பெறுதலும் இல்லாமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage