
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 25. கல்லாமை
பதிகங்கள்

நில்லாது சீவன்நிலையன் றெனவெண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே.
English Meaning:
Knowing full well that life is a fleeting vaporous mist,The truly learned seek the path of Dharma and penance strict,
But the not-learned, in truth, this world`s sordid knaves,
Sport in carnal joys, with Karmic misery mixt.
Tamil Meaning:
கற்று வல்லார், இப்பிறப்பின் நிலையாமையை அறிந்து, `இல்லறம், துறவறம்` என்னும் இருவகை அறத்துள் தமக்கு இயைந்த தொன்றில் நிற்பர். இனிக் கல்லா மனிதர், கீழ்மக்கள் ஆதலின் தீவினையால் விளைகின்ற துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பர்.Special Remark:
சீவன் - உடம்பொடு நிற்கும் உயிர்; என்றது அதன் நிலையை. ``அறம்`` என்றது துறந்தார் முதலியோர்க்குத் துணை செய்தலை `ஆதலின்` என்பது சொல்லெச்சமாய் நின்றது. போகம் செய்தல் - அனுபவித்தல்.இதனால் கல்லாதார், தம் உயிர்க்கு உறுதி தேடிக்கொள்ளாமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage