
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 25. கல்லாமை
பதிகங்கள்

வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறை
கல்லா தவர்கள் கலப்பறி யாரே.
English Meaning:
The truly learned live pursuing the one and only path,But others say, ``Many the paths of knowledge are,``
The God Supreme is in all places present;
They the unlearned are, of God`s pervasiveness unaware.
Tamil Meaning:
கல்வி கேள்விகளில் வல்லவர்கள் மெய்ந்நெறியை ஒன்றாகத் துணிந்து அதன்கண் பொருந்தி உயர்வர். அவ்வன்மை இல்லாதவர்கள் மெய்ந்நெறியைப் பலவாகக்கண்டு தடுமாற்றம் எய்தி ஒன்றினும் நில்லாது தாழ்வார். அதனால் எங்கள் சிவபெருமான் எங்கும் நிறைந்து நிற்பினும்; கல்லாதவர் அவனை அடையும் நெறியை உணரமாட்டார்கள்.Special Remark:
`வழி, அறிவு` என வேறு வேறு நின்ற இருசொற் களையும் ஏனையிடத்தும் கூட்டி, ஈரிடத்தும் `அறிவு வழி` என உரைக்க. ``பல என்பார், வாழ்கின்றார்`` என்பவற்றால், ஒன்றெனலும், தாழ்தலும் பெறப்பட்டன. ``இறை`` என்பதன் பின் `ஆயினும்` என்பது எஞ்சி நின்றது. ஐய உணர்வு உள்வழியும் மெய்ப்பொருட் காட்சி நிகழாதாகலின், `அவர் கலப்பறியார்` உள்வழி என்றார். ``ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கே வானம் நணித்து`(குறள், 453) என்றார் திருவள்ளுவ நாயனாரும்.இதனால், கல்வி, கேள்வி இல்லாதார்க்கு ஐயம் நீங்கு மாறின்மை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage