
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- ஏழாம் தந்திரம் - 1. ஆறாதாரம்
- ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 3. பிண்ட லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 7. சிவலிங்கம்
- ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்
- ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு
- ஏழாம் தந்திரம் - 10.அருளொளி
- ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
- ஏழாம் தந்திரம் - 12. குருபூசை
- ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை
- ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை
- ஏழாம் தந்திரம் - 15. போசன விதி
- ஏழாம் தந்திரம் - 16. பிட்சா விதி
- ஏழாம் தந்திரம் - 17. முத்திரை பேதம்
- ஏழாம் தந்திரம் - 18. பூரணக் குகைநெறிச் சமாதி
- ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை
- ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம்
- ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
- ஏழாம் தந்திரம் - 22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 23. பிண்டாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 25. ஞானாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 26. சிவாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 27. பசு லக்கணம் - பிராணன்
- ஏழாம் தந்திரம் - 28. புருடன்
- ஏழாம் தந்திரம் - 29. சீவன்
- ஏழாம் தந்திரம் - 30. பசு
- ஏழாம் தந்திரம் - 31. போதன்
- ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை
- ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை
- ஏழாம் தந்திரம் - 34. அசற்குரு நெறி
- ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி
- ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்
- ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்
- ஏழாம் தந்திரம் - 38. இதோபதேசம்
- ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்
Paadal
-
1. ஆகின்ற நந்தி யடித்தா மரைபற்றிப்
போகின் றுபதேசம் பூசிக்கும் பூசையும்
ஆகின்ற ஆதாரம் ஆறா(று) அதனின்மேற்
போகின்ற பொற்பையும் போற்றகின் றேனே.
-
10. இராப்பக லற்ற இடத்தே யிருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகி
இராப்பக லற்ற இறையடி யின்பத்(து)
இராப்பகல் மாயை இரண்டடித் தேனே.
-
2. பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
இருந்தன்மை யாலும்என் நெஞ்சிடங் கொள்ள
வருந்தன்மை யளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கநின் றாரே.
-
3. கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரஒண் ணாதே.
-
4. மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்
ஆவயின் ஞான நெறிநிற்றல் அற்சனை
ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம்
சேவடி சேரல் செயலறல் தானே.
-
5. உச்சியுங் காலையு மாலையும் ஈசனை
நச்சுமின் நச்சி `நம` என்று நாமத்தை
விச்சுமின் விச்சி விரிசுடர் மூன்றினும்
நச்சுமின் பேர்நந்தி நாயக னாகுமே.
-
6. இந்துவும் பானுவுமி யங்குந் தலந்திடை
வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்
இந்துவும் பானுவுமி யங்காத் தலத்திடை
வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே.
-
7. இந்துவும் பானுவு மென்றெழு கின்றதோர்
விந்துவும் நாதமு மாகிமீ தானத்தே
சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே.
-
8. மனபவ னங்களை மூலத்தின் மாற்றி
அநித உடல்பூத மாக்கி யகற்றிப்
புனிதன் அருளினிற் புக்கிருந் தின்பத்
தனிஉறு பூசை சதாசிவற் காமே.
-
9. பகலு மிரவும் பயில்கின்ற பூசை
இயல்புடை யீசற் கிணைமல ராகா
பகலு மிரவும் பயிலாத பூசை
சகலமுந் தான்கொள்வன் தாழ்சடை யோனே.