
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 12. குருபூசை
பதிகங்கள்

பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
இருந்தன்மை யாலும்என் நெஞ்சிடங் கொள்ள
வருந்தன்மை யளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கநின் றாரே.
English Meaning:
Rid Fleshly Desires and Know HimWith the sweet scented sandal
That in the forest recesses grows,
And with flowers rare
That heavenward blossom
You may adore Him;
Tamil Meaning:
சிவனது திருவருளை மிகப்பெற்ற நந்தி பெருமான், அப்பேறுடைமை பற்றியேயன்றிச் சிவனோடு மாறுபட்டுப் பகைச் செயலையே புரிகின்ற ஆணவ இருளுக்குப் பகலவனாய் இருத்தல் பற்றியும் அவரை முனிவரும், தேவரும் தம் இதயத்திலே எப்பொழுதும் வைத்துத் தியானிக்கின்றனர்.Special Remark:
சிவனது திருவருளினும் பெரியது வேறொன்றின் மையால் அதனையே, ``பெருந்தன்மை`` என்றார். ``பெருந்தன் மையை உடைய நந்தி`` என்க. நேமி சக்கரம் ஆதலின் அது `பரிதி` என்னும் பெயரைத் தோற்றுவித்துப் பகலவனை உணர்த்திற்று. `நேமியாம் இருந்தன்மை` என்க. இருந்தன்மை - சிறப்பு. உம்மை இறந்தது தழுவிற்றாகலின் அதற்கேற்ற பொருள் முன்பு வருவிக்கப் பட்டது. ``என் சித்தத்தே தன்னை வைத்தருளிய குருமூர்த்தி * ``என்னையிப் பவத்திற் சேராவகை`` என்றபடி ``வானவர்`` என்பதில், ``வான்`` என்பது, `உயர்வு` என்னும் பொருட்டாய் நிற்க. ``வானவர்`` என்பது, `உயர்ந்தோர்` எனப் பொருள் தந்தது. ``வானவர் தேவர்`` உம்மைத்தொகை. இதனை, ``தாங்கி நின்றார்`` என்பதற்கு முன்னே கூட்டியுரைக்க. `தாங்குதல் அறிவினால்` ஆகலின், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது.இதனால் `முனிவர், தேவர் என்பவரும் குருவின் வழியே ஞானம் பெறுகின்றனர்` எனக் குருவருளின் இன்றியமையாமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage