
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 12. குருபூசை
பதிகங்கள்

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரஒண் ணாதே.
English Meaning:
Path of Jnana is Supreme ArchanaWhen you excel in the Path of Jnana
That leads like the Para Supreme,
The Path of Jnana is all Archana;
Great indeed is constant worship within;
To reach the Lord`s Feet is to still actions all.
But unless you know Him,
Your fleshy desires and
You cannot reach His Feet
That are with honeyed flowers bedecked.
Tamil Meaning:
காட்டில் பொருந்தியுள்ள கோடிக் கணக்கான சந்தன மரங்களின் கட்டைகளைத் தேய்த்தெடுக்கப்பட்ட நறுமணம் கமழ்கின்ற சந்தனத்தையும், அதுபோலவே ஆகாயம் அளாவக் குவிக்கபப்ட்ட பெருமை மிக்க மலர்கலையும் பயன்படுத்திச் சிவனை வழிபட்டாலும் உடம்பைத் தம்மின் வேறாக உணர்ந்து அதன்கண் உள்ள பற்றை விடுத்துச் சிவனையே பற்றாக உணர்பவர்க்கல்லது ஏனையோர்க்கு அவனது, தேன் நிறைந்த செந்தாமரை மலர்போலும் திருவடியைச் சேர இயலாது.Special Remark:
`அவனை அவ்வாறு உணரும் உணர்வைக் குருவினால் அன்றி அடைய இயலாது` என்பது குறிப்பெச்சம்.இதனால், `மேற்கூறிய சிவபூசையும் குருவருள் பெற்றே செயற்பாலது ஆகலின், சிவபூசைக்கு முன்னே குருபூசை செய்தல் இன்றியமையாதது` என்பது உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage