
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 12. குருபூசை
பதிகங்கள்

மனபவ னங்களை மூலத்தின் மாற்றி
அநித உடல்பூத மாக்கி யகற்றிப்
புனிதன் அருளினிற் புக்கிருந் தின்பத்
தனிஉறு பூசை சதாசிவற் காமே.
English Meaning:
Cross the Gates of Awareness and TattvasCourse the Sakti Kundalini,
Transcend the successive gates of Awareness
Reduce the perishable body to its elemental (tattva) constituents
And then discard them;
Then do you enter the Grace of the Holy One
And there you abide and adore
That indeed is the worship meet for Sadasiva.
Tamil Meaning:
மனத்தின் ஓட்டத்திற்குக் காரணமாயுள்ள இட ஓட்ட வல ஓட்ட மூச்சுக் காற்றுக்களை அவ்வழியே ஓட விடாது தடுத்து நடு நாடி வழியாக ஓடும்படி மாற்றி, பூத காரியமாய் நின்று அழிகின்ற உடலை அவ்வாறு அழியாது நிலைத்திருக்கின்ற உடலாகச் செய்தற் பொருட்டு அதன் காரணமாகிய பூதங்களில் ஒடுக்கி அவையாகச் செய்யுமாற்றால் போக்கி, மீண்டு அது திருவருளினின்றும் தோன்றச் செய்யுமாற்றால் திருவருள் உடம்பாக ஆக்கி அதனுள் தான் புகுந்து சிவமாகி அதனானே சிவானந்தம் மேலிட நின்ற வழிபடும் வழிபாடே ஒப்பற்ற வழிபாடாகும். அதனையே சதாசிவ மூர்த்தி ஏற்பர்.Special Remark:
``மூலம்`` என்பது ஆகுபெயராய் அதற்கு மேலுள்ள சுவாதிட்டானத்தையும், பின் அங்குள்ள சுழுமுனை நாடியையும் குறித்தது. ``மூலத்தான்`` என்பது பாடமாயின், `மூலமாகிட அவ் விடத்து` என உரைக்க. `அநித்தம்` என்பது, ``அநிதம்`` என இடைக் குறைந்து நின்றது. ``புக்கு`` என்றதனால் முன்பு வெளியே சென்றிருந் தமை பெறப் பட்டது. சிவபூசையைத் தொடங்குதற்கு முன்னே யோக பாவனையால் பூதசுத்தி செய்யுமாற்றால் பௌதிக உடலை அழித்துத் திருவருள் உடம்பை உண்டாக்கி அதில் தான் புகுந்து சிவோகம் பாவனையால் சிவமாகியே பூசையைத் தொடங்குதலும், அதன் பொருட்டு பூத சத்திக்கு முன்னே தன்னைப் பௌதிக உடம்பினின்றும் பிரித்துத் துவாத சாந்தமாகிய மீதானத்திலுள்ள சிவத்தின்பால் சேர்த்து நிறுத்திப் பின்பு மீட்டும் முன்ரே் கொணர்ந்து திருவருள் உடம்பிற் சேர்த்துச் சிவமாகின்ற முறை இம்மந்திரத்தால் உணர்த்தப்பட்டது. இவ்வாறு செய்தலே உண்மைச் சிவபூசையாகலானும், இதனைக் குரு முகமாக அன்றி அறிதல் கூடாமையால் `அவ்வாறு அறியாது தாம் தம் அறிந்தவாறே செய்யும் பூசைகள் எல்லாம் பொதுச் சிவ பூசைகளே` என்று சிவாகமங்கள் கூறுகின்றன. அதனையே இங்கு நாயனார் உணர்த்தினார் என்க.இதனால், சிவபூசை உண்மைப் பூசையாக அமையுமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage