
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 12. குருபூசை
பதிகங்கள்

இந்துவும் பானுவு மென்றெழு கின்றதோர்
விந்துவும் நாதமு மாகிமீ தானத்தே
சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே.
English Meaning:
Worship Nandi Beyond the Spheres of Sun and MoonWhen beyond the Spheres of Sun and Moon you ascend
There Bindu and Nada are;
Ascending (through Adharas) thus,
Your Awareness crosses
The frontiers of Waking State;
There when you continuous worship Nandi,
That verily is worship Divine.
Tamil Meaning:
சந்திர கலையும், சூரிய கலையுமாகச் சொல்லப் படுகின்ற மூச்சுக்காற்று அடக்கப்பட்டபொழுது நடுநாடி வழியாக மேல் ஏறி விந்துத்தானமாகிய ஆஞ்ஞையையும், நாதத்தானமாகிய ஏழாந்தானத்தையும் கடந்து அதற்குமேல் பிரம ரந்திரம் வழியாகப் பன்னிரண்டங்குல அளவுள்ள நிராதாரத்தே செல்லின் அந்நிலை `சாக்கிரத்தில் துரியம்` எனப்படும். அதனையும் கடந்திருப்பது மீதானம். அது சாக்கிரத்தில் அதீதத்தானம். அந்நிலையில் சிந்தனையைச் செலுத்திச் சிவனை வழிபடுதலே எல்லாவற்றிலும் மேலான வழிபாடாம்.Special Remark:
``ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்றுமீதானத் தேசெல்க உந்தீபற;
விமலற் கிடமதென் றுந்தீபற`` *
என்னும் திருவுந்தியார் இங்கு நோக்கத் தக்கது.
மீதானமே, ``துவாதசாந்தப் பெருவெளி`` என்றும், துரியங் கடந்த பரநாத மூலத்தலம்`` * என்றும் சொல்லப்படுகின்றது. ``சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் இந்நிலையினரே`` எனச் சேக்கிழார் விளக்குதல் காண்க. 8
என்று - எனப்பட்டு. எழுகின்றது - எழுகின்ற மூச்சுக் காற்று. ஓர் - சிந்திக்கின்ற; வினைத்தொகை. ஆகி - இடத்தால் அவையேயாய். ``சென்றிட்டு`` என்பதை ``மீதானத்தே`` என்பதன் பின்னர்க் கூட்டுக. `அதீதத்ததே` என்பது இடைக் குறைந்து ``அதீதத்தே`` என நின்றது.
இதனால், `எல்லா வழிபாட்டிலும் மேலான வழிபாடு இது` என அதன் இயல்பு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage