
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 12. குருபூசை
பதிகங்கள்

உச்சியுங் காலையு மாலையும் ஈசனை
நச்சுமின் நச்சி `நம` என்று நாமத்தை
விச்சுமின் விச்சி விரிசுடர் மூன்றினும்
நச்சுமின் பேர்நந்தி நாயக னாகுமே.
English Meaning:
To Feed Jnani is to be Supremely BlessedA hundred times blessed
Is to perform puja in places holy;
A ten hundred times blessed
Is to worship His Presence;
A hundred, hundred times blessed
Is to feed those their thoughts have stilled;
Blessed, blessed far indeed is to see
That a Jnani is to contentment fed.
Tamil Meaning:
உலகீர், `காலை, நண்பகல், மாலை` - என்னும் மூன்று போதிலும் சிவனை வழிபட விரும்புங்கள். அவ்வழிபாட்டில் `நம` என்பதை இறுதியில் உடைய மந்திரம் சிறப்புடையனவாகும் ஆதலால் அவற்றையே மிகுதியாக உங்கட்குப் பயனை விளைக்கும் வித்துக்களாக விதையுங்கள். அவ்வாறு விதைப்பதற்குரிய நிலமாய் விளங்குவன `கதிர், மதி, தீ` - என்னும் முச்சுடர்களுமாம். (ஆகவே, அவ்விடத்து அவற்றை விதையுங்கள்) அச்சிவன் `நந்தி` என்னும் பெயருடைய குருமூர்த்தியாயும் விளங்குவன்.Special Remark:
தமக்கு நந்திபெருமான் குருவாயினமை பற்றி, ``நந்தி நாயகனாகும்`` என்றருளிச் செய்தாரேனும், `அவரவர்க்கு அருள் செய்த அவ்வக் குருமார்களாயும் அவன் விளங்குவான்` என்பதே கருத்தென்க. எனவே, `இங்கு விதிக்கப்பட்ட முறையிலே குருவை வழிபடுக` என்றதாம். `குருவருள் பெற்றோர்க்குக் குருவே சிவனாதல் பற்றி, முச்சுடர் முதலிய எவ்விடத்தும் அவர் குருவையே காண்பர்` என்பதாம். ``நாயகன்`` என்பது இங்குக் குருவைக் குறித்தது.செய்யுள் நோக்கி ``உச்சி`` முதற்கண் வைக்கப்பட்டது. ஆன்மார்த்த வழிபாட்டிற்கு முப்போதே அமையும் ஆதலின் அவற்றையே கூறினார். காலையின் விரிவு விடியலும், மாலையின் விரிவு எற்பாடுமாக நள்ளிரவுங் கூட்டி ஆறுகாலம் பரார்த்த வழிபாட்டில் கொள்ளப்படுகின்றன. அவை முறையே உஷத்காலம், பிராதக் காலம், மாத்தியானிக காலம், சாயங்கால உபசந்தி (பிரதோஷகாலம்) சாயங்கால மகாசந்தி (இரண்டாம் காலம்) அர்த்த ஜாமம் எனப்படுகின்றன. மலர் தூவி அருச்சித்தல் முதலாகப் பெரும் பாலானவற்றிற்கு உரியவாகும் சிறப்புப் பற்றி, `நம` என்னும் மந்திரங்களையே குறித்தார்.
இதனால், குருவழிபாடு முப்போதும் செய்தற்குரியதாதல் கூறப்பட்டது.
இதனை அடுத்துப் பதிப்புக்களில் காணப்படும் ``புண்ணிய மண்டலம்`` என்னும் மந்திரம் அடுத்த அதிகாரத்திற்கு உரியது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage