
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- ஏழாம் தந்திரம் - 1. ஆறாதாரம்
- ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 3. பிண்ட லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 7. சிவலிங்கம்
- ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்
- ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு
- ஏழாம் தந்திரம் - 10.அருளொளி
- ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
- ஏழாம் தந்திரம் - 12. குருபூசை
- ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை
- ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை
- ஏழாம் தந்திரம் - 15. போசன விதி
- ஏழாம் தந்திரம் - 16. பிட்சா விதி
- ஏழாம் தந்திரம் - 17. முத்திரை பேதம்
- ஏழாம் தந்திரம் - 18. பூரணக் குகைநெறிச் சமாதி
- ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை
- ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம்
- ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
- ஏழாம் தந்திரம் - 22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 23. பிண்டாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 25. ஞானாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 26. சிவாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 27. பசு லக்கணம் - பிராணன்
- ஏழாம் தந்திரம் - 28. புருடன்
- ஏழாம் தந்திரம் - 29. சீவன்
- ஏழாம் தந்திரம் - 30. பசு
- ஏழாம் தந்திரம் - 31. போதன்
- ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை
- ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை
- ஏழாம் தந்திரம் - 34. அசற்குரு நெறி
- ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி
- ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்
- ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்
- ஏழாம் தந்திரம் - 38. இதோபதேசம்
- ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்
Paadal
-
1. அருளில் தலைநின் றறிந்தழுந் தாதார்
அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்
அருளின் பெருமை அறியார் செறியார்
அருளின் பிறந்திட்(டு) அறிந்தறி வாரே.
-
2. வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி
ஆரா அமுதளித் தானந்த பேர்நந்தி
பேரா யிரம்உடைப் பெம்மான்பேர் ஒன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுகென் றானே.
-
3. ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் சிவன்பெருந்தன்மையைக்
கூடிய வாறே குறியாக் குறிதந்தென்
ஊடுகின் றாள்அவன் தன்அருள் உற்றே.
-
4. உற்ற பிறப்பும் உறுமல மானதும்
பற்றிய மாயா படலம் எனப்பண்ணி
`அற்றனை நீ`என் றடிவைத்தான் பேர்நந்தி
கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே.
-
5. விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னை வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே.
-
6. ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா
ஒளியுளோர்க் கன்றோ ஒழியா தொளியும்
ஒளியிருள் கண்டகண் போல்வே றாய்உள்
ஒளியிருள் நீங்கி உயிர்சிவம் ஆமே.
-
7. புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி
நிறமே புகுந்தென்னை நின்மல னாக்கி
அறமே புகுந்தெனக்(கு) ஆரமு தீந்த
திறமேதென் றெண்ணித் திகைத்திருந் தேனே.
-
8. அருளது என்ற அகலிடம் ஒன்றும்
பொருளது என்ற புகலிடம் ஒன்றும்
மருளது நீங்க மனம்புகுந் தானைத்
தெருளுறும் பின்னைச் சிவகதி யாமே.
-
9. கூறுமின் நீர்முன் பிறந்திங்(கு) இறந்தைமை
வேறொரு தெய்வத்தின்மெய்ப்பொருள் நீக்கிடும்
பாறணி யும்உடல் வீழவிட்(டு) ஆயுயிர்
தேறணி யாம்இது செப்பவல் லீரே.