
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 10.அருளொளி
பதிகங்கள்

அருளில் தலைநின் றறிந்தழுந் தாதார்
அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்
அருளின் பெருமை அறியார் செறியார்
அருளின் பிறந்திட்(டு) அறிந்தறி வாரே.
English Meaning:
Be Born in Grace and Receive GraceThose who do not take their firm stand on Grace
And in conscious determination steep in it not,
Will never Grace receive;
Nor be freed of Pasas Five*
They will not know greatness that Grace gives;
They will not resolute be;
They alone know Grace who to Grace are born.
Tamil Meaning:
திருவருளைப் பெற்று அதனானே அதன் இயல்பை உணர்ந்து அதிலே அழுந்தாதவர்கள் அத்திரு வருளோடு இயைந்து ஒழுகும் ஒழுக்கத்தில் நில்லார், அங்ஙனம் நில்லாமையால் அவர் ஐம் பாசங்களினின்றும் நீங்கதலும் இல்லை. பாசங்களின் நீங்காமையால் அவர் திருவருளின் பெருமையை அறிந்து அதனை அடைய முயல மாட்டார். திருவருளைப் பெற்றோர் தமது வினைப்பிறப்பே அருட் பிறப்பாகப் பெற்று, திருவருளின் பெருமை அறிந்து அதில் அழுந்துதலும் செய்வர்.Special Remark:
எனவே, திருவருள் ஒளியேயாதல் உடன்பாட்டு முகத்தாலும், எதிர்மறை முகத்தாலும் விளங்கும் என்பதாம்.`அருளின் வேறு பிறப்பாகப் பிறந்திட்டு` என்க. இறைவன் குருவாய் நின்று திருவருளை வழங்கப் பெற்றோர் முன்னைப் பிறப்பை மாற்றி வேறு பிறப்பாய்ப் பிறந்தவர் எனச் சொல்லப் படுதல் பலரும் அறிந்தது. முன்னர் ``அறிந்து, என்றமையால் பின்னர் ``அறிவார்`` என்றது அழுந்தியறிதலைக் குறித்தது.
இதனால், திருவருள் ஒளியேயாதல் எதிர்மறை முகத்தால் வலியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage